Home பாலியல் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய பாலியல் ரீதியான உடல்நல பிரச்சனைகள்

பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய பாலியல் ரீதியான உடல்நல பிரச்சனைகள்

19

ebf6597f-06cf-455f-b149-9b5160b9bdaa_S_secvpfஆண்களை போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும்.

பல பெண்களுக்கு தங்களின் பாலியல் ரீதியான ஆரோக்கியத்தை பற்றி தெரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் பாலியல் ரீதியான

ஆரோக்கிய தகவல்களை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும்.

ஆரோக்கியமாக இருந்திட பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய

பாலியல் ரீதியான உடல் நலன்களை பார்க்கலாம்..

• ஈஸ்ட் தொற்றுக்கள் என்பது பெண்களுக்கு உண்டாகும் பொதுவான ஒன்றே. ஈஸ்ட் தொற்று என்பது பொதுவாக சிறிய

எண்ணிக்கைகளில் யோனியில் (பெண் பிறப்புறுப்பில்) வாழ்ந்திடும் ஒரு பூஞ்சையாகும் (ஃபங்கஸ்). இவை சிறிய எண்ணிக்கைகளில்

இருந்தாலும் வேகமாக அதிகரிக்கும் பண்பை கொண்டது.

அதனால் கேண்டிடா ஆல்பிகன்ஸ் பூஞ்சை நோய் ஏற்படும் அளவிற்கு கூட போய் விடலாம். எரிச்சல், புண் மற்றும் யோனி,

யோனிமுகம், ஆசனவாய் சிவத்தல் அல்லது வீக்கமடைதல் போன்ற பிறப்புறுப்பு ஈஸ்ட் தொற்றுக்களே இதற்கான பொதுவான

அறிகுறிகளாகும்.

உடலுறவு வைத்துக் கொள்ளும் போது, இதனால் வலியும் கூட உண்டாகலாம்.

பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தில் முக்கியமான பிரச்சனை என்னவென்றால், ஈஸ்ட் தோற்று என்பது எந்த பெண்ணிற்கு

வேண்டுமானாலும் ஏற்படலாம். அதனால் உங்களுக்கு அந்த பிரச்சனை இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை உங்கள்

மருத்துவரை அணுகி தெரிந்து கொள்ளுங்கள். ஈஸ்ட் தொற்று என்பது பாலியல் ரீதியாக பரவும் தொற்று (STI) பாக்டீரியாவால் கூட

ஏற்படலாம். ஆனால் உடலுறவு மூலமாக பெண்ணுக்கு ஈஸ்ட் தொற்று ஏற்படுவது மிகவும் அரிதே..

• டெஸ்டோஸ்டிரோன் என்பது மிகவும் முக்கிய பங்கை வகிக்கிறது. பெண்களின் பாலியல் உணர்வை தூண்டுவதிலும் இது

தொடர்புடையது. பெண்களின் டெஸ்டோஸ்டிரோன் தான் அதிகமானவை. 20-களில் இருக்கும் அந்த எண்ணிக்கை வயதாக வயதாக

அதன் எண்ணிக்கையும் குறையும். பெண்களின் கருப்பை தான் அவர்களின் வாழ்நாள் முழுவதும் டெஸ்டோஸ்டிரோனை உருவாக்கும்.

ஒருவேளை, அதன் உற்பத்தி பெருமளவில் குறைய தொடங்கி விட்டால், லிபிடோ குறைவு அல்லது மகிழ்ச்சி அளிக்கிற பாலுணர்வு

குறைவை உண்டாக்கிவிடும்.

வயது ஏற ஏற இதுவும் மெதுவாக குறையத் தொடங்கிவிடும். ஹார்மோனின் அளவு குறைவதால், யோனி

மற்றும் பெண்குறி ஆகிய இடத்தில் உணர்திறன் குறைந்துவிடும்.

இறுதி மாதவிடாய் நிறுத்தத்தை அடையாத பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சையை தவிர்க்க சொல்கிறார்கள் பெண்களின்

பாலியல் ரீதியான உடல்நல வல்லுனர்கள். இறுதி மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு, பாலியல் உணர்வுகள் மீண்டும் உயிர்ப்பு

பெறுகின்ற நேர்மறையான விளைவுகளை காட்டியுள்ளது.

• உடலுறவுக்கு பின் யோனியில் அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு ஆகியவை எல்லாம் சில அலர்ஜிகளாகும். விந்துவினால் ஏற்படும்

சில ஒவ்வாமையால் தான் பெண்களுக்கு உடலுறவு தொடர்பான அலர்ஜி உண்டாகிறது.

இது விந்து திரவத்தில் இருக்கும் புரதத்தின் வகையை பொறுத்து அமைவதால், இந்த அலர்ஜியின் தன்மை ஒவ்வொருவரை பொருத்தும்

மாறுபடும். இதனை கவனிக்காமல் விட்டு விட்டால், பெண்களுக்கு காப்புப்பிறழ்வு (அனாபிலாக்ஸிஸ்) ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

• இனப்பெருக்க திறன்களின் முடிவை பெண்கள் அடையும் காலம் உள்ளது. பல பெண்கள் 45 முதல் 55 வயதிலான கால கட்டத்தில்

இறுதி மாதவிடாய் நிறுத்தத்தை அடைவார்கள். இறுதி மாதவிடாய் நிறுத்தத்தின் போது மனநிலை மாற்றங்கள், அளவுக்கு அதிகமான

உணர்ச்சிகள் மற்றும் உணர்திறன் மிகைப்பு ஆகியவற்றை பெண்கள் அனுபவிப்பார்கள்.

ஹாட் ஃப்ளாஷ், வறட்சியாகும் யோனி, பாலியல் ஈடுபாட்டில் குறைவு மற்றும் இரவு நேர புழுக்கங்கள் போன்ற சில அறிகுறிகளையும்

பெறுவார்கள். இறுதி மாதவிடாய் நிறுத்தத்திற்கு மருந்துகள், சுய பராமரிப்பு பயிற்சிகள் என பல சிகிச்சைகள் முறைகள் தேவைப்படும்.