பெண்களை வேலைக்கு வைத்திருப்பவர்களின் கனிவா ன கவனத்திற்கு . . .
பெண்களை, வேலைக்கு வைத்தி ருப்பவர்கள் கீழ்கண்டவற்றை செய்ய வேண்டியது அவசியமான து மிகவும் முக்கியமானது. அவைகள்என்னவென்று
பார்க்கலாம்.
பாலியல் வன்முறை சம்பந்தப்ப ட்ட விளக்கத்தை பணியிடத்தில் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
பாலியல் வன்முறையைத் தடுப்பதும், பாலியல் வன் முறைக்கான புகார்களைப் பரீசிலிப் பதற்கான நடைமுறைகளை ஏற்படு த்துவதும், பாலியல் வன்முறைக் குற்றங்களுக்கான நடவடிக்கை எடு ப்பதும் ஒரு பணியமர்த்துநரின் கட மையாகும்.
பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட பெண், தான் அந்த இடத்திலிருந்து பணிமாற்றம் செய்ய விரும்பினாலோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவரை வேறு இட த்திற்கு பணிமாற்றம் செய்யவிரும்பி னாலோ, அதற்கு வாய்ப்பளிக்க வே ண்டும்.
ஒருபெண்ணுக்கு சுமுகமான பணிச்சூழலை அமைத்து த்தருவது ஒரு பணியமர்த்து பவரி ன் கடமையும் பொறுப்புமாகும்.
பாதுக்காப்பான பணிச்சூழல் ஒவ் வொரு பணிபுரியும் பெண்ணுக்கும் உள்ள உரிமையா கும்.
பணிப்புரியும் பெண்கள் மதிப்புடனும், மரியாதையுடனும் நடத்தப்படவேண்டும் .நிர்வாகம் நடத்தும்கூட்டங்களில் பெண் தங்களுக்கு இழைக்கப்படும் தொல்லை கள் குறித்து பேச வாய்ப்ப ளிக்க வேண்டும்.
பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற பணிச் சூழலோடு, அவ ர்களின் சுகாதாரம் மற்றும் நலனு ம் பேணப்படுதல்வேண்டும். இதை யெல்லம் பணியமர்த்துபவர் கடை ப்பிடிக்க வேண்டியவை ஆகும்.