ஆண்மையும் பெண்மையும் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் பல உண்டு. அதன் முதல் அறிகுறியே குழந்தையின்மை தான். கர்ப்பத்தடை சாதனங்கள் ஏதும் பயன்படுத்தாமல் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரையிலும் உடலுறவு கொண்டும் குழந்தை பிறக்கவில்லை என்றால் நிச்சயம் மருத்துவரை சந்திப்பது நல்லது.
பெண்கள் இதுபோன்று தடையேதுமின்றி உறவு கொள்ளும்போதும் கர்ப்பமடையாமல் இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது நல்லது.
ஆனால் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பெண்மைத்தன்மை குறைவது மட்டுமே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. இன்னும் பல உடல் நலப் பிரச்னைகளும் அதில் இருக்கின்றன.
பெண்மைத்தன்மை குறைவதற்கான அறிகுறிகள்
பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் இருந்து தான் இந்த பிரச்னை தொடங்கும். எப்போதும் போல் மாதவிலக்கு இருக்காது. ரத்தப் போக்கு வழக்கத்தைவிட அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்.
முறையற்ற மாதவிலக்கு சுழற்சி உண்டாகும்.
சில சமயங்களில் பல மாதங்களுக்கு மாதவிலக்கு ஏற்படாது. திடீரென நின்றுவிடும்.
முதுகுவலியும் தாங்கமுடியாத வயிற்று வலியும் உண்டாகும்.
ஹார்மோன் மாற்றங்கள் நிகழும் என்பதால் கருமுட்டை வளர்ச்சி குறைவாகவோ அல்லது வயிற்றில் கருமுட்டை தங்காமலோ இருக்கும்.