நம்முடைய முன்னோர்கள் காலத்தில் திருமணத்தில் பெண்கள் வயது குறைந்தவர்களாகவும் ஆண்கள் வயதில் பெரியவர்களாகவும் இருந்தார்கள். அதற்குப் பல்வேறு அறிவியல் காரணங்கள் கூறப்பட்டன.
ஆனால் தற்போது மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலில் பெண்கள் தங்களைவிட குறைவான வயதுடைய ஆண்களைத் திருமணம் செய்து கொள்ளவும் ஆண்கள் தங்களைவிட வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார்கள்.
திருமணம் குறித்தும் தங்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவில்,
தாயின் செல்லப்பிள்ளையாக இருக்கும் ஆண்களை மணப்பதில் ஆட்சேபமில்லை என்றும், அதனால் திருமண வாழ்வு பாதிக்காது என்றும் 80 சதவீத இளம்பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதில் 95 சதவீதம் பேர் ஆர்வம் உள்ளதாகக் கூறியுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
தங்களை விட வயது குறைவான ஆண்களை திருமணம் செய்துகொள்வதில் எந்த பிரச்னையும் இல்லை என்று 97 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெண்களுடன் ஷாப்பிங் செல்வதில் ஆர்வம் காட்டாதது ஏன் என்ற கேள்விக்கு, பொறுமையின்மை மற்றும் சலிப்பு ஆகியவையே முக்கியமான காரணங்களாக ஆண்கள் குறிப்பிட்டுள்ளனர்.