Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்களுக்கு எச்சரிக்கை

பெண்களுக்கு எச்சரிக்கை

22

news_28-07-2014_71selfiஉண்மையில் இன்றைய டீன் ஏஜ் பெண்கள் மிக அழகாகதான் இருக்கிறார்கள். அவர்களிடம் அழகுணர்ச்சியும், ஸ்டைலும் மிக அதிகமாகவே இருக்கிறது. தங்களிடம் இருக்கும் அழகையும், திறமையையும் வெளிப்படுத்தி அவர்கள் முடிந்த அளவு முன்னேறவும் முயற்சிக்கிறார்கள்.

அதனால் இஙபபோது மாடலிங் துறைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. மாடல் ஆவதற்கு திறமையும், ஆசையும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் இருந்தால் தைரியமாக இந்த துறைக்கு யாரும் வரலாம்.

இப்போது பேஷன் வீக் என்ற பெயரில் மாடலிங் ஷோக்கள் அடிக்கடி நடக்கின்றன. மாடலிங் துறையில் காலூன்றி, நல்லது கெட்டதை உணர்ந்து தாக்குப்பபிடித்து விடுகிறவர்கள், முறைப்படி பயிற்சி கொடுக்கும் நிறுவனத்தின் ஒத்துழைப்பை பெறலாம்.

25 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை பயிற்சி கொடுக்கிறார்கள். யோகா, நடனம், ஜிம் பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, நடிப்பு, ஆளுமைத்திறன் மேம்பாடு, பாடி லாங்வேஜ் உள்பட பல விஷயங்கள் அங்கு கற்றுத்தரப்படுகின்றன.

அவைகளில் தேறிவிட்டால் ஒ.கே. ஒரு மாடல் ரெடியாகி விடும் மாடல்களுக்கு கட்டுடலும், முக அழகும் மட்டும் இருந்தால் போதாது. அறிவும், தன்னம்பிக்கையும், எனர்ஜியும் எப்போதும் தேவை. பேச்சு, பழக்கவழக்கங்களில் ஒருவித ஈர்ப்பும் இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் அவைகளை வளர்த்து கொள்ள வேண்டும். மனதில் பயமும், சந்தேகமும் இருந்தால் இந்த துறையில் சாதிக்க முடியாது. ஏமாற்றுவது எல்லா துறைகளில் இருப்பது போல் அங்கேயும் உண்டு.

படிப்பு, வேலையை விட்டுவிட்டு நம்பர் ஒன் மாடல் ஆகியே தீருவேன் என்று அழைந்து கொண்டிருக்கும் பெண்கள் நிறைய உண்டு. அப்படிப்பட்டவர்களையும், புதுமுகங்களையும் குறிவைத்து ஏமாற்றவும், சிலர் அலைந்து கொண்டிருப்பார்கள். அவர்களை போன்றவர்களிடம் சிக்காமல் இருப்பதும் ஒரு கலைதான்.

ஆஸ்டலில் தங்கியிருந்து மாடலிங்கில் அடியெடுத்து வைக்கும் பெண்களில் சிலர் நண்பர்களின் பிறந்த நாள் பார்ட்டி, விருந்து, விழ என்று இரவு நேரங்களில் வெளிவே செல்வார்கள். அவர்களை கண்காணித்து சிலர் இருப்பார்கள்.

அவர்கள் அந்த பெண்களை சில நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவோ, தலைமை தாங்கவோ அழைத்து சென்று நெருக்கத்தை உருவாக்குவார்கள். பின்பு சிறிய போட்டோ ஷூட்களுக்கு அழைப்பார்கள். அப்படியே நட்பு எல்லைமீறிபோய் பிரச்சனைகுரியதாக மாறிவிடும்.

இந்தமாதிரியான சிக்கல்களுக்கு அந்த பெண்களை மட்டும் குறை சொல்ல முடியாது. சில பெற்றோர் தங்கள் மகளுக்கு அதில் ஆர்வம் இல்லை என்று தெரிந்தும் கட்டாயப்படுத்தி மாடலிங் உலகிற்கு அனுப்பி வைக்கிறார்கள்.

பேஸ்புக்கில் யாருடன் லிங்க் வைத்துள்ளார்கள் என்பதை எல்லாம் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். ஆடம்பரமாக வாழவேண்டும் என்று நினைக்கும் பெண்கள் ஏமாற்றுக்காரர்களிடம் எளிதாக சிக்கி விடுகிறார்கள். தங்களுக்குகென்று எல்லைகளை வகுத்து கொண்டு கட்டுப்பாட்டுடன் வாழத்தெரிந்தவர்களால் மட்டுமே மாடலிங் துறையில் உயரத்தை எட்ட முடியும்.