Home பாலியல் பெண்களின் புணர்ச்சிப் பரவசநிலை (ஆர்காஸ்ம்) பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

பெண்களின் புணர்ச்சிப் பரவசநிலை (ஆர்காஸ்ம்) பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

38

பெண்களின் புணர்ச்சிப் பரவசநிலை என்பது என்ன?
புணர்ச்சிப் பரவசநிலை என்பது பாலுறவு கிளர்ச்சியின் இறுதி அல்லது நிறைவு நிலையாகும். இதனைத் தொடர்ந்து சட்டென ஒரு அதீத இன்ப நிலை உணரப்படும்.
பெண்களின் பாலியல் பதில்வினை நிகழ்வு பல நிலைகளாக விவரிக்கப்படுகிறது:
கிளர்ச்சி நிலை: பாலியல் கிளர்ச்சி தொடங்கும் ஆரம்ப நிலை
எழுச்சி நிலை: இது இரண்டாவது நிலையாகும். இதில் பாலியல் கிளர்ச்சி மேலும் அதிகரிக்கிறது.
புணர்ச்சிப் பரவசநிலை: இதுவே பாலியல் கிளர்ச்சியின் இறுதி மற்றும் நிறைவு நிலை.
மீட்சி நிலை: இந்நிலையில் பாலியல் இறுக்கம் படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலைக்கு வரும்.

பெண்களின் புணர்ச்சிப் பரவசநிலையை பல்வேறு விஞ்ஞானிகள் பல்வேறு முறைகளில் வரையறுக்க முயற்சி செய்துள்ளனர். ஒரு விஞ்ஞானி “மனிதர்களில், பெண்களில் ஏற்படும் புணர்ச்சிப் பரவசநிலை என்பது குறுகிய காலமே நீடிக்கின்ற ஓர் அதீத இன்ப உணர்வு, இச்சமயத்தில் பெண்களின் விழிப்புணர்வு வேறொரு நிலைக்குச் சென்றுவிடும், பொதுவாக இந்நிலையில் அனிச்சையாக, ஒரு சீரான இடைவெளியில் ஏற்படும் இடுப்புப் பகுதி மற்றும் பிறப்புறுப்பைச் சுற்றிலும் உள்ள தசைப் பகுதிகள் சுருங்கி, ஒரு வித்தியாசமான மனநிலை ஏற்படும். வழக்கமாக அதனைத் தொடர்ந்து கருப்பை மற்றும் ஆசனவாய்த் தசைப் பகுதிகளும் சுருங்கும், அத்துடன் மையோடோனியா எனும் நீண்ட தசைச்சுருக்கங்களும் ஏற்படும். இதனால் பாலியல் கிளர்ச்சியால் விரிவடைந்த தசைப் பகுதிகள் மீண்டும் சுருங்கி இயல்பு நிலையை அடையும் (சில சமயம் ஓரளவே இயல்பு நிலையை அடையும்), இந்தத் தருணத்தில் பெண்களுக்கு சௌகரியமாகவும் மனநிறைவாகவும் இருக்கும் ஒரு உணர்வு ஏற்படுகிறது. ” என்று வரையறுக்கிறார்.
இந்த வரையறையானது முக்கியமாக, பெண்களின் புணர்ச்சிப் பரவசநிலையின் உடல் மற்றும் மனம் சார்ந்த அம்சங்களை விவரிக்கிறது. பெண்கள் தமக்கு ஏற்பட்ட புணர்ச்சிப் பரவசநிலை பற்றி வெவ்வேறு விதமாகக் கூறுகின்றனர். பிறப்புறுப்பைச் சுற்றிலும் உள்ள இடுப்புப் பகுதித் தசைகளில் தொடர்ச்சியான இடைவெளிகளில் ஏற்படும் சுருக்கத்தின்போது, மிகவும் பரவசமான உணர்வு ஏற்படுகிறது, அத்துடன் கருப்பை மற்றும் ஆசனவாய்த் தசைப்பகுதிகளிலும் இதே போன்று தசைச்சுருக்கங்கள் ஏற்படுகின்றன, இச்சமயத்தில் மகிழ்ச்சியான, மனநிறைவான ஓர் உணர்வும் ஏற்படுவதாக பெண்கள் கூறுகின்றனர்.
பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் அவர்களின் புணர்ச்சிப் பரவசநிலையை அனுபவிக்கின்றனர். வழக்கமாக ஏற்படும் அனுபவங்கள்: சூடாக, வேகமாக சிரமப்பட்டு சுவாசித்தல், வியர்த்தல், உடல் குலுங்குதல், சூழலைப் பற்றிய உணர்வே இல்லாதிருத்தல் அல்லது முனகுதல் போன்றவை.
பெண்களுக்கு புணர்ச்சிப் பரவசநிலை என்பது எதற்காக உள்ளது? (Why do women have orgasms?)
பெண்களுக்குப் புணர்ச்சிப் பரவசநிலை எதற்காக உள்ளது என்று அறிவியல் ஆய்வுகள் பின்வருமாறு கூறுகின்றன:
உணர்ச்சிகளையும் தூண்டுவதற்கு
ஆண் பெண் எல்லைகள் நீங்கி, கலவியின் போது இருவர் ஒருவராக மாறியதாக உணர்வதற்கு
உடலுறவு போதும் என நிறுத்துவதற்கு அடையாளமாக
இடுப்புப் பகுதியில் ஏற்படும் பாலியல் கிளர்ச்சியைக் கையாள்வதற்கு
இனப்பெருக்க மண்டல உறுப்புகள் நன்றாக செயல்படுவதற்கு
பெண்களின் பாலியல் பதில்வினை நிகழ்வின் நிலைகள் (Stages of sexual response cycle in the female)
கிளர்ச்சி நிலை: இது பாலியல் உணர்வு கிளர்ந்தெழும் நிலையாகும். ஒவ்வொருவருக்கும் சூழ்நிலை சார்ந்து வேறுபடுகிறது, பெரும்பாலும் சில நிமிடங்களே நீடிக்கும். ஆனால் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் முதல் சில மணி நேரம் வரையிலும் நீடிக்கக்கூடும். இந்த நிலையில் உடலில் பின்வரும் மாற்றங்களைக் கவனிக்கலாம்:
இதயத் துடிப்பும் இரத்த அழுத்தமும் உயரும்
சுவாசம் வேகமாகும்
தோலில் உள்ள இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதன் மூலம், இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் தோல் ஓட்டத்தை அதிகரிப்பதால், இரத்த நாளங்கள் விரிவடைவதால் இரத்த ஓட்டம் அதிகரித்து தோல் சிவக்கும்
மார்பகங்கள் விரிவடையும்
முலைகள் விறைத்து கெட்டியாகும்
உடலின் தசை இறுக்கம் அதிகரிக்கும்
பிறப்புறுப்பு ஈரமாகி (வழவழப்புத் தன்மை பெறுதல்), யோனியின் பெரிய இதழ்கள் தனியாகப் பிரியத் தொடங்கும்
இனப்பெருக்க மண்டலத்திற்கு வரும் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் யோனியின் சிறிய இதழ்களும் கிளிட்டோரிஸ் பகுதியும் விரிவடைந்து வீங்கும்
எழுச்சி நிலை: இந்த நிலையில், பாலியல் கிளர்ச்சி தொடர்ச்சியாக அதிகரித்து, கிளர்ச்சி நிலையில் உடலில் ஏற்படத் தொடங்கிய மாற்றங்கள் மேலும் தீவிரமடையும். இந்த நிலையில் பாலியல் கிளர்ச்சியும் இன்பமும் திடீரென்று பெருகி அதிகரிக்கும் நிகழ்வுகள் சில முறைகள் ஏற்படும். இந்த நிலை குறுகிய காலமே நீடிக்கும், வழக்கமாக சில வினாடிகள் முதல் சில நிமிடங்கள் வரையே நீடிக்கும். இந்த நிலையில் பின்வரும் மாற்றங்கள் ஏற்படலாம்:
இதயத் துடிப்பும் இரத்த அழுத்தமும் சுவாசமும் தொடர்ந்து அதிகரிக்கும்
தசைப்பகுதிகளின் இறுக்கம் மேலும் அதிகரித்து பாதங்களிலும் கைகளிலும் முகத்திலும் திடீர் தசைச்சுருக்கம் ஏற்படலாம்.
கிளிட்டோரிஸ் பகுதி எளிதில் தூண்டுதல் பெறக்கூடியதாக மாறும்
பிறப்புறுப்பின் வெளிப்புறமுள்ள கால்பகுதியில் இரத்த ஓட்டம் நிரம்புவதால் அப்பகுதிகள் நீலம் அல்லது பரப்பில் நிறமாகலாம்
புணர்ச்சிப் பரவசநிலை: இதுவே பெண்களின் பாலியல் பதில்வினை நிகழ்வின் இறுதி நிலையும் மிகக் குறைந்த காலமே நீடிக்கும் நிலையுமாகும். வழக்கமாக இது சில வினாடிகளே நீடிக்கும். இந்த நிலையில்:
உடலின் குணாம்சங்கள் (இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் சுவாசம்) அதிகரிக்கும்
தன்னிச்சையான தசைச்சுருக்கங்கள் ஏற்படும்
உடல் முழுவதுமே தோல் சிவக்கலாம்
பிறப்புறுப்பைச் சுற்றிலும் உள்ள இடுப்புப் பகுதித் தசைகள் சுருங்கி, கருப்பையிலும் தொடர்ச்சியாக தசைச்சுருக்கங்கள் ஏற்படலாம்
தசை இறுக்கம் திடீரென்று நீங்கும்

மீட்சி நிலை: உடலானது மெதுவாக கிளர்ச்சியற்ற சகஜ நிலைக்குத் திரும்புகிறது. உடல் உறுப்புகள் வழக்கமான அளவை அடைகின்றன. இந்த நிலையில் நிறைவு, திருப்தி நெருக்கம் போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன.
பெண்களில் புணர்ச்சிப் பரவசநிலையைத் தூண்டுவது எது? (What Triggers an orgasm in women?)
பெண்களின் புணர்ச்சிப் பரவசநிலையைத் தூண்டுவது எது என்பதைப் பற்றி பல ஆண்டுகளாக பல அனுமானங்கள் நிலவி வருகின்றன, பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பிட்ட நேர அளவிற்கு பாலியல் கிளர்ச்சி அடைந்திருந்த பிறகே புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படுகிறது, ஆனால் குறிப்பாக எந்தத் தூண்டுதல் அந்தப் புணர்ச்சிப் பரவசநிலையைத் தூண்டுகிறது என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடுகிறது. பிறப்புறுப்புப் பகுதியில் தூண்டுதல்களை ஏற்படுத்துவதன் மூலமும் பெண்களை புணர்ச்சிப் பரவசநிலை அடையச் செய்ய முடியும், பிறப்புறுப்பு அல்லாத மற்ற பகுதிகளைத் தூண்டுவதன் மூலமும் முடியும். பெரும்பாலும் புணர்ச்சிப் பரவசநிலையை ஏற்படுத்துவதற்கு தூண்ட வேண்டிய முக்கியமான பகுதிகள் கிளிட்டோரிஸ் மற்றும் பிறப்புறுப்பு ஆகியவையாகும். ஆனால் சிறுநீர்ப் பாதைப் பகுதி, மார்பகங்கள்/முலைகள் அல்லது பிறப்புறுப்பைச் சுற்றிலும் உள்ள இடுப்புப் பகுதிகளில் தூண்டுவதாலும் பெண்களுக்கு புணர்ச்சிப் பரவசநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றன. வெளியிடப்பட்ட சில அறிக்கைகளில், பிறப்புறுப்பு சார்ந்த எந்தத் தூண்டுதலும் இல்லாமல், மனதில் காட்சிப்படுத்திப் பார்த்தல் முறை அல்லது உடலுறவு செய்வதாகக் கற்பனை செய்யும் முறை அல்லது ஹிப்னாடிச முறையிலும் பெண்கள் புணர்ச்சிப் பரவசநிலையை அடைந்தது பற்றி பெண்கள் தமது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளனர். பாலியல் ரீதியாக எவ்விதத் தூண்டுதலும் இல்லாமல் தன்னிச்சையாகவே புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படும் நிகழ்வுகள் பற்றியும் தகவல்கள் உள்ளன, ஆனால் இது அரிதான நிகழ்வாகும்.
கிளிட்டோரிஸ் பகுதியை நேரடியாகத் தூண்டுதல் (கிளிட்டோரிஸ் பகுதியைத் தொடுதல் அல்லது தட்டுதல்), கிளிட்டோரிஸ் பகுதியை மறைமுகமாகத் தூண்டுதல் (ஆணுறுப்பு அழுத்தும்போது கிளிட்டோரிஸ் பகுதி மறைமுகமாகத் தூண்டப்படுதல்), பிறப்புறுப்பில் (விரல் அல்லது ஆணுறுப்பைக் கொண்டு தேய்த்து) தூண்டுதல், கருப்பை வாய்ப் பகுதியைத் தூண்டுதல் (கருப்பையின் கீழ் விளிம்பை ஆணுறுப்பு அல்லது விரலால் தட்டுதல்) போன்ற முறைகளில் பெண்கள் புணர்ச்சிப் பரவசநிலையை அடையலாம். அதே சமயம், ஒருபோதும் எந்த விதத் தூண்டுதலினாலும் புணர்ச்சிப் பரவசநிலை அடையாத பெண்களும் உள்ளனர்.