Home சமையல் குறிப்புகள் பூண்டு வெங்காய குழம்பு

பூண்டு வெங்காய குழம்பு

27

34e255d4-c483-4f12-a6f6-a3fc9bb40638_S_secvpfதேவையான பொருட்கள்:

சாம்பார் வெங்காயம் – 100 கிராம்

பூண்டு – 12 பல்

புளி – ஒரு எலுமிச்சை அளவு

சாம்பார் பொடி – 3 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

• 50 கிராம் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• 50 கிராம் வெங்காயத்தை முழுமையாக வைக்கவும்.

• முதலில் புளியை நீரில் ஊற வைத்து, கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

• பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

• பின்னர் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

• வெங்காயம் பொன்னிறமானதும், அதில் சாம்பார் பொடியை சேர்த்து, சிறிது நேரம் வதக்க வேண்டும். பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளி நீரை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

• இப்போது சுவையான பூண்டு வெங்காய குழம்பு ரெடி!!!

• இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.