Home சமையல் குறிப்புகள் பூண்டு சாதம்

பூண்டு சாதம்

22

தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி – ஒரு கப்
பூண்டு – 10 பற்கள் (பெரிய பல்லாக)
தேங்காய் விழுது – 2 தேக்கரண்டி
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
நெய் – 2 தேக்கரண்டி
மிளகு -10
உப்பு – தேவைக்கேற்ப
முந்திரி – 10
ஏலக்காய் – ஒன்று
கிராம்பு – 2
பட்டை – ஒரு துண்டு
பெருஞ்சீரகம் – கால் தேக்கரண்டி
கொத்தமல்லி மற்றும் புதினா – சிறிது

செய்முறை :

• வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். பூண்டைத் தோலுரித்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.

• குக்கரில் நெய் ஊற்றி, பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு, முந்திரி, பெருஞ்சீரகம், புதினா, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

• எண்ணெய் பிரிந்து வந்ததும் தேங்காய் விழுது மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்த பிறகு அரிசியைச் சேர்த்து, உப்பு போட்டு வேகவிட்டு இறக்கவும். சுவையான பூண்டு சாதம் தயார். கொத்தமல்லித் தூவி பரிமாறவும்