Home சமையல் குறிப்புகள் பீட்ரூட் அல்வா

பீட்ரூட் அல்வா

36

DSCN3496பீட்ரூட் – அரை கிலோ
சீனி – 300 கிராம்
நெய் – 100 கிராம்
டால்டா – 50 கிராம்
பால் – அரை லிட்டர்
திராட்சை – 5 கிராம்
முந்திரி – 10 கிராம்
சிவப்பு அல்வா பவுடர் – சிறு துளி
பீட்ரூட் தோலை நன்றாக சீவி அதை தண்ணீரில் கழுவிய பிறகு நன்றாக துருவிக் கொள்ளவேண்டும்.
அதன்பின் துருவிய பீட்ரூடை ஒரு பாத்திரத்தில் போட்டு பாலை ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும்.
பீட்ரூட் நன்றாக வெந்தவுடன் அதில் சீனியை போட்டு கிளறி விடவேண்டும். சீனி நன்றாக கரைந்தவுடன் இதில் நெய், டால்டா, அல்வா பவுடர் மூன்றையும் போட்டு கிளற வேண்டும்.
அல்வா பதம் வந்தவுடன் ஒரு அகன்ற பாத்திரத்தில் நெய் தடவி அல்வாவை கொட்டி பரப்பி விட்டு அதன்மேல் முந்திரி, திராட்சை தூளை தூவ வேண்டும். சிறிது நேரம் கழித்து சுவைத்து பார்த்தால் சுவையாக இருக்கும்.