Home ஆரோக்கியம் பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதித்தான்’ என்ற பழமொழி சொல்லவருவது என்ன? மீந்து போன...

பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதித்தான்’ என்ற பழமொழி சொல்லவருவது என்ன? மீந்து போன 20% செய்யும் சேட்டை

1052

பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் இனப்பெருக்கம் செய்யும் தன்மை இல்லாமல் போகிறது. அதேபோல ஆண்களுக்கும் இந்த நிலை வருமா? பொதுவாக பெண்களுக்கு பூப்படைவு ஏற்பட்டது முதல் மாதவிலக்கு நிற்கும்வரை இனப்பெருக்கம் செய்ய முடியும். ஆனால் ஆண்களுக்கு இது போன்ற முடிவு இருப்பதில்லை. முடி நரைத்து வயதானாலும் கூட இனவிருத்தி செய்யும் தன்மை இருக்கும்.

‘பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதித்தான்’ என ஊர்பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள். கேள்விப்பட்டிருப்பீர்கள். எதனால் இப்படி சொல்கிறார்கள் என விசாரித்தால், ஆண்களுக்கு வயதானாலும் கூட பாலுணர்வுகள் தூண்டப்பட்டு கொண்டே இருக்குமாம்.

பெண்களை போலவே ஆண்களுக்கும் இனப்பெருக்கம் செய்யும் தன்மை நின்றுவிடும் நிலையை மென் மெனோபாஸ் அல்லது ஆண்ட்ரோ போஸ் என்கிறார்கள். ஆனால் ஆண்களுக்கு இந்த நிலை வருவதில்லை. ஆண்களுக்கு வயதாக வயதாக 1% என்றவகையில், டெஸ்ட்ரோசோன் ஹார்மோன் குறைந்துகொண்டே போகும்.