Home பாலியல் பிள்ளைப்பேற்றிற்கான பாலியல்

பிள்ளைப்பேற்றிற்கான பாலியல்

20

185373718_dc7190048fபிள்ளைப்பேற்றிற்கான பாலியல் பற்றி பல கேள்விகள் வந்திருக்கின்றன. அவை அனைத்துக்குமான சில குறிப்புகள் கீழே

1. பிள்ளைப்பேற்றை தடுப்பதற்கான மாத்திரைகள், நீண்டகால கருத்தடை சாதனஙளை பாவித்தல் என்பனவற்றில் இருந்து முழுதாக 3 மாதங்களுக்கு விலகுதல்.

2. பாலியல் உறவை பெண்ணின் கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்புள்ள காலப்பகுதியில் நிகழ்த்துதல்.

3. ஆண் குழந்தைப்பேறை ஏற்படுத்தாத விந்து வெளியேற்றங்களை 48 மணித்தியாலங்களுக்கு தவிர்ந்துகொள்ளல்.

4. உடலுறவில் அதிகாலையில் ஈடுபடுதல்

5. பெண்ணுறுப்பை ஈரலிப்பாக்க செயற்கையான திரவங்களை பயன்படுத்துவதை தவிர்த்தல். அவசியமெனின் நீரை ஆதாரமாகக்கொண்டவற்றை மாத்திரம் பயன்படுத்தல்.

6. கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடிய உடலுறவு முறைகளை பிரயோகித்தல்.

7. பெண்ணுறுப்பை உட்புறமாக சுத்தப்படுத்தும் எந்த முயற்சியிலிருந்தும் தவிர்ந்துகொள்ளல்.

8. பெண் உறுப்பை சுவைப்பதை தவிர்ந்துகொள்ளல்.

9. வெந்நீர் குளியலையோ அல்லது ஸ்பா போன்ற உடம்பை வெதுவெதிப்பாக்கும் எதையும் கணவன் மனைவியும் இக்காலப்பகுதியில் தவிர்ந்துகொள்வது அவசியம்.

10. விந்து வெளியேற்றத்தின் பின் ஆணின் குறி சில நிமிடங்கள் வெளியே எடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்தல்.

11. விந்து வெளியேற்றத்தின் பின், பெண் படுத்த நிலையில் 20 நிமிடமாவது இருத்தல். முடியுமானால் பெண் ஒரு தலையணையை பிட்டம் தொடை சார்ந்த பகுதியில் வைத்து பெண் குறி வயிற்றைவிட உயர்ந்திருப்பதை உறுதி செய்தல்.

குறிப்பு: குழந்தை பேற்றிற்காக முயற்சிக்கும்போது கணவன் இறுக்கமான ஆடைகளை உள்ளாடைகளை அணிவதை ஒருவாரத்திற்கு முன்பிருந்தே தவிர்ந்து கொல்ளவேண்டும். உடல் வெப்பம் விந்தின் வீரியத்தை குறைக்கும்