Home குழந்தை நலம் பிள்ளைகள் பள்ளிக்குப் போக முன் போசாக்கான துரித உணவுகள்

பிள்ளைகள் பள்ளிக்குப் போக முன் போசாக்கான துரித உணவுகள்

24

பிள்ளைகள் சாப்பிடுகிறார்கள் இல்லை என்பதே பல பெற்றோர்களின் ஆதங்கம்.
பெற்றோர்கள் இருவரும் வேலைக்குசெல்வதால் ஆன முறையில் சமைத்துக் கொடுக்க முடிவதில்லை என்பது மற்றொரு பிரச்சனை.

சிரமம்பட்டுச் சமைத்தாலும் பிள்ளைகளுக்கு அந்தச் சாப்பாடுகள் பிடிப்பதில்லை என்பதும் ஒரு சிக்கல்.
அதிகாலையில் பாடசாலை, திரும்பி வந்ததும் அவசரமாக எதையாவது வயிற்றில் திணித்துவிட்டு ரியூசனுக்கு ஓட வேண்டும்.
நின்று நிதானித்து ரசித்துச் சுவைத்துச் சாப்பிட நேரமும் இல்லை. அவர்களுக்குப் பிடித்த சாப்பாடும் வீட்டில் கிடையாது.
என்ன செய்யலாம்?
சமையலறையில் காலத்தை வீணடிக்காமலே அவசரமாக அதே நேரம் சுவையாகவும் குழந்தைகள் விரும்பும் வண்ணம் தயாரித்துக் கொடுப்பதற்கான குறிப்புகளை அமெரிக்காவின் Academy of Nutrition and Dietetics தந்திருக்கிறது
உரித்த முழு வாழைப்பழத்தை யோகொட்டினுள் (yogurt) அமுக்கி எடுங்கள். அதை ஏதாவது crushed cereal அரிசிமாக் குருணல், அல்லது ரவை போன்ற ஒன்றில் போட்டு உருட்டி எடுங்கள். பிரிட்ஜில் வைத்து உறையவிட்டு பின் உண்ணக் கொடுங்கள். குளிரக் குளிர போஸாக்கான உணவு என்பதால் மறுக்காமல் விரும்பி உண்பார்கள்.
பப்பாசி, மாம்பழம், விளாம்பழம், வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒன்றின் குளிரவைத்த பழச்சாறை அரைக் கப் அளவு எடுங்கள், மீதி அரைக் கப்பிற்கு யோகட்டை எடுத்து நன்கு அடித்ரதுக் கலவுங்கள். சுவையான இந்த fruit smoothie குழந்தைகளுக்கு விருப்பமானதாக இருக்கும் அதே நேரம் போஜனை நிறைந்தது.
அலங்கார சான்விட்ச் . பிள்ளைகளுக்கு விருப்புடையதாக இருக்கும் வண்ணாத்துப் பூச்சி, டைனோசயர், இருதயம், நட்சத்திர வடிவிலான குக்கி கட்டரை உபயோகித்தால் விதவிதமாக அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்யலாம். பதனிடப்பட்ட இறைச்சி, கொழுப்புக் குறைந்த சீஸ், பாண் ஆகியவை கொண்டு செய்யலாம்.
பீநட் பட்டர், கோர்ன் பிளேக், பிறான்(Bran flake) பிளேக் போன்ற யாவற்றையும் ஒரு கோப்பையில் இட்டு நன்கு கலவுங்கள். உருண்டையாக உருட்டி எடுத்த பின்னர் அவற்றை வறுத்த கச்சான், கடலை, அல்லது கஜீ குருணலில் உருட்டி எடுத்துச் சாப்பிடக் கொடுங்கள்.
நம்ம நாட்டிற்கு
இவை யாவும் பிரிட்ஜ் வசதியுள்ளவர்களுக்குத்தானே. இன்னமும் மின்சாரமும் பிரிட்ஜ்சும் கிடைக்காத குக்கிராமங்களில் உள்ளவர்கள் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறதல்லவா?
பொரிச்ச அரிசிமா, உழுந்துமா புளுக்கொடியல்மா என எமது அம்மாக்கள், அம்மம்மாக்கள் தயாரித்து போத்தலி்ல் போட்டு வைத்திருந்துதான் பிள்ளைகளுக்கு அவசர உணவுகளைக் கொடுத்தார்கள்.
இன்றைக்கும் கூட இவற்றைத் தயாரித்து வைக்கலாம்.

அவல் மற்றொரு சுலப உணவு. தேங்காயப்பூ சீனி போட்டுத் தயாரிக்கலாம். சற்றுப் போசனை அதிகம் வேண்டுமெனின் தயிர் அவலில் பழத்துண்டுகளைக் கலந்து கொடுக்கலாம்.
அவசரத்திற்கு புருட் சலட்டிற்கு ஐஸ்கிறீம் சேர்த்துக் கொடுக்கலாம். பழச்சத்துடன் பால் சீனி கலந்திருப்பதால் புரதம், இனிப்பு விற்றமின் அனைத்தும் அதில் கிடைக்கும்
ஹாய் நலமா புளக்கில் வெள்யான பதிவு மாணவர்களுக்கு போசாக்கான அவசர உணவுகள்