மார்ச்… ஏப்ரல் என தள்ளிக்கொண்டே போன அஜீத்தின் பில்லா 2 இசை வெளியீட்டு விழாவுக்கு இன்னும் தேதி குறித்தபாடில்லை.
இத்தனைக்கும் படத்தின் இசையமைப்பாளர் யுவன், தன் பணிகளை எப்போதோ முடித்துக் கொடுத்துவிட்டாராம். படம் மே மாதம் இரண்டாம் வாரத்தில் வரும் என்று கூறி வந்தவர்கள், இப்போது இன்னும் தாமதமாகும் என்று அறிவித்துள்ளனர்.
படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தாலும் சரி, எளிமையாக நடந்தாலும் சரி, அது ரஜினியின் தலைமையில்தான் நடக்க வேண்டும் என்பதில் அஜீத் பிடிவாதமாக உள்ளாராம்.
இன்னொரு பக்கம், மங்காத்தா வெற்றியில் திளைக்கும் அஜீத் ரசிகர்கள், அந்த சூடு ஆறும் பில்லா 2 வந்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
ஜூன் 2ம் வாரத்தில் ஒருவேளை படம் வெளியாகலாம் என தயாரிப்பாளர் தரப்பில் கூறிவருகின்றனர். ஆனால் ஹீரோ வழக்கம் போல அமைதி காக்கிறார்.
பில்லா 2-ல் அஜீத்துக்கு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார். படத்தை இயக்குகிறார் சக்ரி டோலட்டி. இன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.