Home பெண்கள் பெண்குறி பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள கருமையை நீக்குவதற்கான சிலஇயற்கை வழிகள்

பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள கருமையை நீக்குவதற்கான சிலஇயற்கை வழிகள்

39

12507539_483449208493936_6330365766827570815_nபிறப்புறுப்பைச் சுற்றியுள்ள கருமையை நீக்குவதற்கான சிலஇயற்கை வழிகள்
*************************************************************************************************
உடலில் மிகவும் கருமையான பகுதி என்றால் அது பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள பகுதி தான். இவ்விடம் இப்படி கருமையாக இருப்பதற்கு இறுக்கமான உள்ளாடை அணிவது, அடிக்கடி ஷேவிங் செய்வது, பழைய ரேசர்களைப் பயன்படுத்துவது மற்றும் சில ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை காரணங்களாகும்.

பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் கருமையைப் போக்க சில எளிய இயற்கை வழிகள்….

#பேக்கிங் சோடா 1
டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து தண்ணீர் கலந்து பேஸ்ட் செய்து, பிறப்புறுப்பைச் சுற்றி தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கருமை நீங்கும்.

#கற்றாழை
கற்றாழை ஜெல்லை தினமும் இரண்டு முறை கருமையாக உள்ள பிறப்புறுப்பு பகுதிகளில் தடவி வர, அதில் உள்ள மருத்துவ குணங்களால் கருமை அகலும். இந்த முறையை தொடர்ந்து 15 நாட்கள் செய்து வர, சற்று மாற்றத்தைக் காணலாம். முக்கியமாக இதற்கு சுத்தமான கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்த வேண்டுமே தவிர, கெமிக்கல் கலந்து கடைகளில் விற்கப்படுவதையல்ல.

#வெள்ளரிக்காய்பேஸ்ட்
வெள்ளரிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பிறப்புறுப்பைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி 15-20 நாட்கள் தினமும் செய்து வர அப்பகுதியில் உள்ள கருமை நீங்கியிருப்பதைக் காணலாம்.

#அஸ்பிரின் பேஸ்ட்
2 அஸ்பிரின் மாத்திரைகளை பொடி செய்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, கருமையாக உள்ள பிறப்புறுப்பு பகுதியில் தடவ, அது அப்பகுதியில் உள்ள கிருமிகளை அழிப்பதோடு, கருமையையும் போக்கும். ஆனால் இந்த முறையை ஷேவிங் செய்த உடனேயே செய்யக்கூடாது. இல்லாவிட்டால் கடுமையான எரிச்சல் மற்றும் அரிப்பிற்கு உள்ளாகக்கூடும்.

#பாதாம்
பாதாமை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது பால் சேர்த்து கலந்து, பிறப்புறுப்பைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் 15 நாட்களில் நல்ல மாற்றம் தெரியும்.

#பச்சை பால்
சிறிது காட்டனை எடுத்து பாலில் நனைத்து, கருமையாக உள்ள பிறப்புறுப்பு பகுதியில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை என 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், பாலின் கிளின்சர் தன்மையால், கருமை விரைவில் நீங்கும்.

#எலுமிச்சை மற்றும் தேன்
1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் சிறிது தேன் கலந்து, கருமையாக உள்ள பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, சீக்கிரம் கருமையானது அகலும்.