Home குழந்தை நலம் பிறந்த குழந்தையின் தலை சரியான வடிவத்தில் இருக்க சில டிப்ஸ்!!

பிறந்த குழந்தையின் தலை சரியான வடிவத்தில் இருக்க சில டிப்ஸ்!!

43

WTROOrCzbornபிறந்த குழந்தையின் தலை சரியான வடிவத்தில் இருக்க சில டிப்ஸ்!!

பிறந்த குழந்தை ஒரு மென்மையான பஞ்சு போன்றது. எப்படி ஒரு பஞ்சை கையாள்கிறோமோ, அதேப் போன்று குழந்தையையும் கையாள வேண்டும்.

சுகப்பிரவசம் நடக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மாதியான வடிவில் தலை இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் சில சமயங்களில் சிலருக்கு தலையானது நீளமாக, வட்டமாக, ஏன் சிலருக்கு சதுர வடிவில் கூட தலை இருக்கும். இவை அனைத்திற்கும் நிறைய காரணங்கள் இருக்கின்றன.

பிறந்த குழந்தை ஒரு மென்மையான பஞ்சு போன்றது. எப்படி ஒரு பஞ்சை கையாள்கிறோமோ, அதேப் போன்று குழந்தையையும் கையாள வேண்டும். இல்லையெனில் குழந்தையின் தலை வடிவம் மாறிவிடும். இத்தகைய காரணங்களால் குழந்தையின் தலையின் வடிமானது மாறியிருந்தால், அத்தகைய வடிவத்தை சரிசெய்ய ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

* குழந்தைகளை படுக்க வைக்கும் போது எப்போதும் ஒரே திசையில் படுக்க வைக்காமல், அவர்களை அவ்வப்போது திசை மாற்றி படுக்க வைக்க வேண்டும். இதனாலும், தலையை சரியான வடிவத்தில் கொண்டு வர முடியும்.

* குழந்தை ஒரே திசையைப் பார்த்துக் கொண்டே இருந்தால், தலையின் வடிவம் பாதிக்கப்படும். எனவே அவர்கள் ஒரே திசையை பார்த்துக் கொண்டிருக்காமல் இருக்க, அவர்களது கவனத்தை அவ்வப்போது திசை திருப்புவதற்கு ஒலி எழுப்பும் பொருளை அவ்வப்போது எழுப்பி, அவர்களை அனைத்து திசையிலும் சுற்றி முற்றி பார்க்க வைக்க வேண்டும்.

* குழந்தையை கையில் அதிக நேரம் வைத்திருக்க கூடாது. தொட்டிலில் போட்டு ஆட்டும் போது தலை சரியான வடிவில் வரும்.

* காலையில் குழந்தையை குளிக்க வைக்கும் போது தலையில் எண்ணெய் தேய்ந்து மசாஜ் செய்து வரலாம். படிப்படியாக தலையின் வடிவம் மாறும்.

– மேலும் குழந்தையை கையாளும் போது மிக கவனமான கையாள வேண்டும்.