Home சமையல் குறிப்புகள் பிரியாணி மசாலா மீன் வறுவல்

பிரியாணி மசாலா மீன் வறுவல்

18

என்னென்ன தேவை?

துண்டுமீன் -1/2கிலோ
மிளகாய் தூள் – 1 மேசைகரண்டி
பிரியாணி மசாலா – 1 தேக்கரண்டி
லெமன் சாறு – 2 மேசை கரண்டி
உப்பு -தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் -சிறிதளவு
கார்ன் ப்ளார் பவுடர் – 2மேசைகரண்டி
எண்ணெய்-தேவையான அளவு
எப்படி செய்வது?

மிளகாய்தூள், பிரியாணி மசாலா, லெமன்சாறு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கார்ன் ப்ளார் பவுடர், தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு நன்கு பேஸ்டாக்கி மீனின் இருபுறமும் தடவி 1 மணிநேரம் ஊறவைக்கவும். மீனை வறுப்பதற்கு தேவையான ஒரு கடாயை எடுத்து கடாய் சூடானதும் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மீனை கருகவிடாமல் இருபக்கமும் திருப்பி போட்டு எடுக்த்தால் சுவையான பிரியாணி மசாலா மீன் வறுவல் ரெடி.