Home அந்தரங்கம் பிரம்மச்சாரியை விட குடும்பஸ்தரே மேல்!

பிரம்மச்சாரியை விட குடும்பஸ்தரே மேல்!

18

திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்பவர்களை விட திருமணம் செய்து கொண்டு தாம்பத்ய உறவில் ஈடுபடுபவர்களின் வாழ்நாள் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

 

மனித இனம் ஆதியிலிருந்து இன்றுவரை பாலுறவின் மீது பற்று கொண்டிருக்கிறது. காரணம், அதில் கிடைக்கும் இன்பத்திற்கு ஈடான வேறு இன்பம் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. அனைத்துப் பிரச்சினைகளையும் நோய்களையும் செக்ஸ் என்ற மருந்தினால் தீர்க்கமுடியும் என்கின்றனர் நிபுணர்கள். இல்லற வாழ்க்கையில் தாம்பத்ய உறவுதான் உடலிலுள்ள தடுப்புச் சக்தியான இம்யூன் (Imune) என்னும் சக்தியைத் துரிதப்படுத்துகிறது. இதனால் அனைத்து உடல் வலிகளும், தசை வலிகளும் நரம்பு வலிகளும், மனநோயும் தீருகின்றன. தாம்பத்ய உறவின் மூலம்தான், தலைவலி, முதுகுவலி, இடுப்புவலி, மனநோய் எல்லா வற்றையும் தீர்க்க முடியும் தாம்பத்ய உறவில் ஈடுபடுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாது. இதனால் இதய நோய் பாதிப்புகள் ஏற்படாது இரத்தத்தை விருத்தியடையச் செய்யும். சளி பிடிக்காது; பெண்களுக்கு மார்பில் கட்டி, புற்றுநோய் பாதிப்பு ஏற்படாது என்கின்றனர் நிபுணர்கள்.

உடலுறவு கொள்வது அவரவர்களுடைய உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவைப் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறு படும். சிலருக்குத் தினமும் உடலுறவு இல்லாமல் முடியாது. சிலருக்கு வாரத்திற்கு இரண்டு முறை, மற்றும் சிலருக்கு மாதம் இருமுறை இருந்தால் கூடப் போதும். அவரவர்களுடைய உடற்கூற்றைப் பொறுத்து உடலுறவின் தேவை ஏற்படும்.

உடலுறவின் போது ஹார்மோன் சுரப்பது தூண்டப்பட்டுப் பல விதமான இரசாயனப் பொருள்கள் உற்பத்தியாகின்றன. அடிக்கடி உடலுறவு கொள்வதால் தேவையான அளவு இரத்த ஓட்டம் அதிகரித்துப் பெண்களின் உடலிலுள்ள அனைத்து வலிகளும் தீர்ந்து விடும். அவை வலி நிவாரணியாக, மருந்தாகப் பெண்களுக்கு அமைந்து, நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்படும். சரியான அளவில் அடிக்கடி உடலுறவு கொள்பவர்களுக்குச் செரிமானம் அதிகமாகிப் பசி எடுக்கும் ; நல்ல தூக்கம் வரும் ; அதனால் மன இறுக்கம், கவலை தீரும் ; மனத்தில் அமைதி, நிதானம், மகிழ்ச்சி ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

குடும்ப வாழ்க்கையை வெறுத்துவிட்டு பிரம்மச்சாரியாய் தனித்து இருப்பவர்கள்களுக்கு மனத்தில் இறுக்கமும் ஒரு வேகமான கோபமான நிலையும் ஏற்படும். இதற்குக் காரணம், தாம்பத்ய உறவில் ஈடுபடாததினால் உடலில் அட்ரினலின் (Adernalin) ஹார்மோன் சுரப்பது தான். எனவேதான் பிரம்மசாரிகளைவிடக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டவர்களே அதிக ஆயுள் உள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்று ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள்.