Home பெண்கள் தாய்மை நலம் பிரசவ வலியை பெண்ணின் மன நிலையும்

பிரசவ வலியை பெண்ணின் மன நிலையும்

26

பிரசவத்திற்கான நாள் நெருங்கி வந்துவிட்டால், பொறுமையற்று காத்திருக்கும் தாய்மார்கள் மெதுவாக வயிற்றை அழுத்தி குழந்தையை வெளியே வர உதவி தூண்டுவார்கள். இது போன்றே, பிரசவ காலத்தின் இறுதி நாட்களில் பிரசவிக்கும் பொருட்டாக வலியை தூண்டும் சில வழிமுறைகள் உள்ளன.
அந்த இனிமையான நேரத்திற்காக காத்திருக்கும் வேளையில், இயற்கையான முறையில் தாய்மார்கள் பிரசவ வலியை தூண்டும் வழிமுறைகளை பார்க்கலாம். நடப்பதன் மூலம் பிரசவ வலியை இயற்கையாகவே தூண்டும் வாய்ப்புகள் உள்ளன.
வயிற்றுக்குள் தலைகீழாக இருக்கும் உங்களுடைய குழந்தையை கருப்பை வாய்க்கு அருகே கொண்டு செல்லும் நிகழ்வாக நடை இருக்கும். நீங்கள் சீராக நடந்து செல்லும் போது, உங்களுடைய குழந்தையின் தலையில் ஏற்படும் சீரான அழுத்தம் ஆக்ஸிடோசின் ஹார்மோனை உற்பத்தி செய்வதால், கருப்பையில் சுருக்கங்களை ஏற்படுத்த முடிகிறது.
எனினும், பின்நாட்களில் அதிகமான சக்தி தேவைப்படும் என்பதால் தேவைக்கும் அதிகமாக நடந்து உங்களுடைய சக்திகளை விரயம் செய்து விட வேண்டாம். குழந்தையின் தலைப்பகுதி இடுப்பெலும்பு கூடும் இடத்திற்கு கீழே நகர்ந்து வராத பட்சத்தில், நீங்கள் நடை பயணம் மேற்கொண்டால் குழந்தை சரியான நிலைக்கு வர உதவும்.
நடப்பதோடு மட்டுமல்லாமல், அப்படியே நகர்ந்து கொண்டிருந்தால், அது பிரசவ வலியை உண்டாக்க உதவும். 40 வாரங்களைக் கடந்த கர்ப்பிணியாக நீங்கள் இருந்தால், அன்னாசிப் பழங்களை சாப்பிட்டு பிரசவத்தை தூண்ட முடியும். எனினும், அளவுக்கு அதிகமான அன்னாசிப் பழத்தை சாப்பிடுவதால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
அதுவும் குழந்தை பெறப் போகும் நேரத்தில் உங்களுடைய வயிற்றை தொந்தரவு செய்யக்கூடாது. அன்னாசிப் பழத்தை ஜுஸாக குடிக்க கூடாது. ஜுஸாக சாப்பிடுவதால் புரோமெலாய்ன் அழிந்து விடும். ராஸ்பெர்ரி இலையில் தேநீர் சாப்பிடுவதால் பிரசவம் தூண்டப்படாதெனினும், பிரசவ காலத்தை நெருங்கியுள்ள உங்களுக்கு பல்வேறு வகையிலும் உதவும் குணம் கொண்டதாக ராஸ்பெர்ரி உள்ளது.
நீங்கள் இதனை தேநீராகவோ அல்லது மாத்திரைகளாகவோ சாப்பிடலாம். ஒரு நாளைக்கு 3 கோப்பை வீதம் குடித்து வரலாம். 32 வார பிரசவ காலத்திற்குப் பிறகு மட்டுமே இந்த தேநீரைப் பருக வேண்டும், அதற்கு முன்னால் அல்ல. ஏனெனில், இந்த தேநீர் கர்ப்பப்பையின் தசைகளை தூண்டும் திறன் கொண்டுள்ளது.
இயற்கையான டோனராக இருக்கும் ராஸ்பெர்ரி இலைகளில், கருப்பைக்கு தேவையான இரும்புச்சத்து உள்ளதால், பிரசவத்திற்கு தயாராகும் பெண்களுக்குத் தேவையான இரத்தத்தையும் உற்பத்தி செய்து கொடுக்கும்.