குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு மனரீதியாவும், உடல்ரீதியாகவும் ஒருவித அயர்ச்சி ஏற்படும். இதற்கு காரணம் உடல் வலியும், உடல் வடிவம் மாறிவிட்டதே என்ற கவலையும் தான். எனவே பிரசவித்த பெண்களுக்கு சில மசாஜ் செய்தால் அது மனரீதியாகவும் ரிலாக்ஸ் ஏற்படும் என்கின்றனர் மகப்பேறு நிபுணர்கள்.
ரிலாக்ஸ் கிடைக்கும்
பிரசவத்திற்கு பின்னர் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. குழந்தையை நன்றாக கவனிக்க வேண்டுமே என்று ஒரு வித பதற்றம் ஏற்படும். இதை தவிர்க்க பிரசவத்திற்குப் பின்னர் செய்யப்படும் மசாஜ் மனதிற்கும், உடலுக்கும் ரிலாக்ஸ் தரும்.
உடல்வலிக்கு தீர்வு
கால், தொடை, கழுத்து, முதுகுப்புறம் போன்ற இடங்களில் பிரசவத்திற்குப் பின்னர் ஒரு வித வலி ஏற்படும். இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்லும் முன் கணவரிடம் சொல்லி மசாஜ் செய்து கொள்வதன் மூலம் வலிக்கு நிவாரணம் கிடைக்கும். நன்றாக உறக்கம் வரும்.
தாய்பால் அதிகரிக்கும்
மசாஜ் செய்வதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராகும், உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் கிடைக்கும். குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் உற்பத்தி அதிகமாகும். உடலில் ஆங்காங்கே தடைகள் இருந்தாலும் அவை நீங்கும். லூசான தசைகள் இருக்கமடையும்.
தழும்புகள் நீங்கும்
மசாஜ் செய்வதன் மூலம் உடலில் ஏற்பட்ட தழும்புகள் நீங்கும். பிரசவகாலத்தில் தோலில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். ரெகுலராக மசாஜ் செய்வதன் மூலம் குண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும். தோலில் உள்ள இறந்த செல்கள் உதிர்ந்து புரிய செல்கள் தோன்றும்.