Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பின்பக்கக் கொழுப்பை குறைக்கும் பட் பிளாஸ்டர் பயிற்சி

பின்பக்கக் கொழுப்பை குறைக்கும் பட் பிளாஸ்டர் பயிற்சி

17

sunny-leone-hot-stills-11சிலர் பார்க்க ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் பின்பக்கம் அதிகளவு சதை இருக்கும். அதனால் எந்த உடை போட்டாலும் அவர்களுக்கு பார்க்க அசிங்கமாக இருக்கும். இவர்கள் சில பயிற்சிகளை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

தினமும் தோப்புகரணம் போட்டுவந்தால் நல்ல பலனை காணலாம். தோப்பு கரணம் போடுவதால் பின்பக்க கொழுப்பு மட்டும் அல்லாமல் கால், தொடையையும் வலுக்கும். கீழே உள்ள இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் விரைவில் பின்பக்க கொழுப்பை குறைக்கலாம். இந்த பயிற்சி செய்ய முதலில் தரையில், முட்டியை மடக்கி பாதத்தின் மேல் உட்கார வேண்டும்.

முன் உடலை வளைத்து, கைகளைத் தரையில் ஊன்றி, (யானை போல்) நிற்க வேண்டும். தலை தரையைப் பார்த்தபடி இருக்கட்டும். இப்போது வலது கால் முட்டியை மடக்கி, மேல நோக்கி உயர்த்தி இறக்க வேண்டும். பின்னர், இதேபோல இடது கால் முட்டியை மடக்கி உயர்த்தி இறக்க வேண்டும். இது தான் ஒரு செட், இதேபோல ஆரம்பத்தில் 15 முறை செய்ய வேண்டும்.

பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். பின்பக்கம் அதிகளவு கொழுப்பு இருப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். இந்த பயிற்சியை செய்ய ஆரம்பித்த ஒரு மாதத்திலிருந்தே படிப்படியாக வித்தியாசம் தெரிவதை காணலாம்.

பலன்கள்: பின்பக்கக் கொழுப்பு குறைந்து, குளூட்டியஸ் (Gluteus) எனப்படும் பின்பக்கத் தசைகள் வலுவடையும்.