Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பின்னழகை அழகாக்கும் பயிற்சி

பின்னழகை அழகாக்கும் பயிற்சி

18

111முகமும் முன்னழகும் மட்டுமே பெர்சனாலிட்டிக்கு ப்ளஸ் அல்ல. முதுகும் பின்னழகும் ஃபெர் பெக்டா இருந்தாதான் பெர்சனாலிட்டி மட்டுமல்ல டிரெஸ் ஃபிட்டிங்கும் பெர்
ஃபெக்டா இருக்கும். இதுதான் யூத்துகளின் லேட்டஸ்ட் பாடி சென்ஸ். அனுஷ்கா மாதிரியான அழகான பின்னழகிற்கு எளிய நான்கு பயிற்சிகள்…
• ஒரு விரிப்பை தரையில் விரித்துக் கொள்ளவும். அதில் அப்படியே நிமிர்ந்து முட்டிக் கால் போட்டுக் கொண்டு அமரவும். பின் முட்டிக் காலை அசைக்காமல் இடுப்புக்கு மேலே வில்லாக வளைந்து கொள்ளவும். அப்படி, நன்றாக வளைந்து கொண்டே உங்களின் பின்னங் கால்களைத் தொடுவதற்கு முயற்சி செய்யுங்கள். முடிந்த அளவுக்கு நன்றாக
வளைந்து உங்களின் பாதங்களைத் தொடவும். இப்படியே சுமார் 30 விநாடிகளுக்கு காலில் இருந்து கையை எடுக்காமல் வளைந்த படியே பாதங்களைத் தொட்டுக் கொண்டு இருங்கள்…
• மேட்டில் வசதியாக வயிறு அழுந்தியிருக்கும்படி படுத்துக்கொள்ளுங்கள். வயிற்றுப் பகுதி தரையில் நன்றாக பதிந்திருக்க வேண்டும். பிறகு இரண்டு கைகளையும் நேராக நீட்டிக் கொள்ளவும். இதைச் செய்யும்போதே உங்களின் தலை மேல் நோக்கித் தூக்கியவாறு இருக்க வேண்டும். இப்போது இடது கையைத் தூக்கியவாறு வலது காலையும் தூக்கியபடி கொஞ்சம் நேரம் அதே பொஸிஷனில் வைத்திருங்கள். உங்களின் உடம்பு நேராக இருக்கட்டும். இப்போது சாதாரண நிலைக்கு வந்து வலது கையைத் தூக்கியபடி இடது காலை தூக்குங்கள். இப்படியே பத்து தடவை செய்யவும்.
• மேட்டில் படுத்துக் கொள்ளுங்கள். தலை மட்டும் அப்படியே அசையாமல் இருக்கட்டும். தோள்பட்டை, வயிற்றுப்பகுதி, கால்கள் போன்றவற்றை அப்படியே தூக்கியவாறு வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, முழங்கால் பகுதி மடங்கியவாறு கால்கள் கீழே பதியும்படி இருக்கட்டும். கைகள் இரண்டும் சமமாக மேட்டில் அழுந்தும்படி அப்படியே நீட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்படி தினமும் பத்து தடவை செய்ய வேண்டும்.
• நாற்காலியின் முனையில் உட்காரவும். மெதுவாக இப்போது உங்களின் இடுப்பை மட்டும் முன்னுக்குத் தள்ளுங்கள். இடுப்பை அப்படியே வைத்துக் கொண்டு உங்களின் முதுகு, கழுத்துப் பகுதி, தலைப்பகுதியை முன்னே நோக்கித் தள்ளுங்கள். இப்போது உங்களின் இரண்டு கைகளில் வாட்டர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு மெதுவாக அதை மேலே தூக்கவும். அப்படியே கீழே இறக்கவும். இதையும் பத்து தடவை செய்யவும். இந்த நான்கு பயிற்சிகளையும் தினசரி செய்து வந்தால் பிறகென்ன நீங்கள் அனுஷ்காதான்.