Home பாலியல் பிட்டு படம் பார்ப்பதால் ஏற்படும் தீய விளைவுகள்

பிட்டு படம் பார்ப்பதால் ஏற்படும் தீய விளைவுகள்

174

1. செயற்கை உலகம் :

கணவன்/மனைவி உடன் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியிலான தொடர்பைக் கொண்டிருப்பது மிக முக்கியம். பிட்டு படம் பார்ப்பதால் உறவு பிளவுபடும். ஒரு கனவு ( செயற்கை ) உலகில் வாழ்வது போன்று இருக்கும். உண்மையான நபர்களுடன் வாழும் எண்ணத்தை இழக்க நேரிடும்.

2. நெருக்கம் இல்லா உறவு :

பிட்டு படம் உறவு பற்றி தவறான புரிதலை ஏற்படுத்தும், இது உணர்ச்சியற்ற உறவிற்க்கு வழி வகுக்கும். அடிப்படை ஆசை மற்றும் திருப்தி இல்லாமல் செய்து விட அதிக வாய்ப்புகள் உண்டு. நம் உறவுகளில் என்ன தவறு என்று யோசித்தே சிலர் எரிச்சல் அடைந்து விடுவார்கள். அவர்கள் உணர்வுபூர்வமான இடைவெளியை உணரலாம்.

3. திருப்தியின்மை :

பிட்டு படம் ஒரு குறுகிய கால சந்தோஷம், இறுதியில் வெறுமை மற்றும் ஆழ்ந்த தனிமையை ஏற்படுத்தும். பிட்டு படங்களை பார்த்து உறவில் ஈடுபடும் போது உங்களால் உங்கள் துணைக்கு திருப்தி தர முடியாது.

4. பிட்டு படத்திற்கு அடிமையாவது :

ஆல்கஹால், புகை போன்று பிட்டு படம் பார்ப்பதும் ஒரு போதை, இதில் இருந்து நீங்கள் வெளிவர முடியாது, மிக குறைவான அளவே பார்ப்பவர்கள் எளிதில் வெளியேறலாம். போதைப்பொருளால் அடிமையானவர்கள் போதைப்பொருளை கடந்து செல்ல எடுக்கும் முயற்சிகளை விட கடினமானது.

5. நிறைவேறாத ஆசை :

பிட்டு படம் இன்பத்தை அனுபவிப்பதற்கும், உணர்ச்சிகளைத் தணிப்பதற்கும் உதவுகிறது. அவர்களின் மூளை வேதியியல் மாற்றம் மற்றும் ஒரு முழு அடிமைத்தனத்தை ஏற்படுகின்றது. உங்கள் துணையின் ஆசையை பூர்த்தி செய்ய முடியாது.

6. உறவில் ஏமாற்றம் :

உங்களால் வெளிப்படையாக எதையும் தெரிவிக்க முடியாது, பல விஷயங்களை மறைத்து உங்கள் துணையை ஏமாற்றி வாழவேண்டும். பலரும் தங்கள் துணையிடம் மறைத்து செய்யும் ஒன்று தான் பிட்டு படங்களை பார்ப்பது, உங்கள் துணையை விட்டு விலகி இருக்க செய்யும். இதனால் உங்கள் துணை உங்களை ஏமாற்றலாம்.

7. காலத்தை வீணடிப்பது :

சராசரியாக ஆண்கள் வாரத்திற்கு 7 மணி நேரம் பிட்டு படம் பார்ப்பதில் விரையம் செய்கிறார்கள். பெண்கள் பிட்டு படங்களை பார்ப்பதில்லை என்று சிலர் நினைக்கலாம் ஆனால் பெண்கள் சராசரியாக 4 மணி நேரம் பிட்டு படம் பார்க்கின்றனர். பிட்டு படங்கள் பார்ப்பதை நிறுத்தினால் நீங்கள் இந்த நேரத்தை சேமிக்கலாம்.

8. பசி :

இது ஒரு போதை போன்றது என்பதால், அது உங்களுக்கு ஒரு பசியை உருவாக்குகிறது. பிட்டு படம் பார்ப்பது அதிக நேரத்தை வீணடிக்கும், அதே நேரம் உங்கள் பசியை தூண்டும்.