கொஞ்ச நாட்களாக உங்களுக்கு பாலியல் உணர்வு வருவதில்லையா? உங்கள் காதல் வாழ்க்கை உணர்ச்சிப் பெருக்கெடுக்க, நீங்கள் காரசாரமாக சாப்பிட வேண்டும் என்றில்லை. பாலியல் விருப்பத்தை அதிகரிக்கும் சில உணவுகளின் பட்டியலை இங்கு காணலாம்:
1. ஸ்ட்ராபெர்ரி (Strawberries)
ஸ்ட்ராபெர்ரியின் நிறம் மட்டும் காதலை உணர்த்துவதல்ல, அதில் ஆன்டிஆக்ஸிடண்டுகளும் அதிகமுள்ளன. உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த ஸ்ட்ராபெர்ரி உதவுகிறது. இதனால் பாலியல் செயல்திறன் மேம்படும். காதலர் தினத்தின் சர்ப்ரைஸ் மீல் பிளானில் ஸ்ட்ராபெர்ரி எப்போதுமே இருக்கும், அதற்குக் காரணம் இப்போது புரிகிறதா!
2. வெண்ணெய்ப்பழம் (Avocado)
பல்வேறு விதங்களில் இது உடலுக்கு ஆரோக்கியமளிக்கும் பழமாக உள்ளது. இதில் வைட்டமின் B6 மற்றும் பொட்டாசியம் அதிகமுள்ளது, இவை இரண்டுமே பாலியல் விருப்பத்தை அதிகரிப்பதில் திறன் வாய்ந்தவை. இந்தப் பழத்தை அப்படியே சாப்பிட்டாலும் சரி, மில்க்ஷேக் செய்து சாப்பிட்டாலும் சரி அல்லது குவாக்கமோலீ செய்து சாப்பிட்டாலும் சரி, அது இதயத்திற்கு மிகவும் நல்லது இதனால் பாலியல் விருப்பமும் அதிகரிக்கிறது.
3. தர்பூசணி (Watermelon)
தர்பூசணியில், சிட்ருல்லின், பீட்டா-கரோட்டின், லைக்கோப்பீன் போன்ற தாவர ஊட்டச்சத்துகள் (ஃபைட்டோநியூட்ரியன்ட்ஸ்) உள்ளன. இவை பாலியல் விருப்பத்தை அதிகரிப்பவை. எனவே, நீங்களும் உங்கள் இணையரும் சில தர்பூசணித் துண்டுகளை சாப்பிடுங்கள் அல்லது தர்பூசணிச் சாறு அருந்துங்கள், அசத்துங்கள்!
4. கோக்கோ (Cocoa)
சாக்லேட் சாப்பிடுவது சந்தோஷத்தைக் கொடுக்கும், உங்கள் மனநிலையையும் சிறப்பாக்கும். கோக்கோவில் அர்ஜினைனும் மனக்கிளர்ச்சி மற்றும் மகிழ்ச்சியைத் தூண்டுகின்ற ஃபீனைலெத்திலமைன் எனும் வேதிப்பொருளும் உள்ளன. நீங்களும் உங்கள் இணையரும் சில சாக்லேட் சாப்பிடுங்கள், காதலைக் கொண்டாடுங்கள்! உருக்கிய சாக்லேட்டில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை நனைத்தும் சாப்பிடலாம்!
5. பூசணி விதைகள் (Pumpkin Seeds)
இயற்கையாகவே பூசணி விதைகளில் துத்தநாகமும் பிற ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளன, இது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு மிகவும் நல்லது. சிறிதளவு பூசணி விதைகளை அப்படியே (சமைக்காமல்) சாப்பிட்டால் பலன்கள் இன்னும் சிறப்பாக இருக்கும்.
6. பச்சை இலைக் காய்கறிகள் (Leafy vegetables):
பொதுவாக ஆரோக்கியமாக இருப்பதற்கு பச்சை இலைக் காய்கறிகள் உதவுகின்றன என்பது நமக்குத் தெரியும், அதுமட்டுமின்றி பாலியல் ஆசையை அதிகரிக்கவும் இவை உதவுகின்றன. இதயம் நன்றாக இயங்க இவை உதவுகின்றன, அதுமட்டுமின்றி இனப்பெருக்க உறுப்புகளுக்கும் நல்ல இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகின்றன. சேலட் அல்லது சூப் செய்யும்போது இவற்றை சேர்த்துக்கொள்ளலாம், பெர்ரி பழங்களையும் கொஞ்சம் சேர்த்துக்கொண்டால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.
7. இலவங்கப்பட்டை (Cinnamon)
இயற்கையிலேயே பாலியல் விருப்பத்தை அதிகரிக்கும் குணமுடைய பல பொருள்கள் உள்ளன. இலவங்கப்பட்டையும் அதிலொன்று. இது உடல் சூட்டை அதிகரித்து, அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, இதன் மூலம் உங்கள் விழிப்புணர்வு மேம்பட்டு, பாலியல் உறவின்போது நிகழ்காலத் தருணங்களில் கவனத்தைச் செலுத்தும் திறன் வளரும், இது மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்கும். இலவங்கப்பட்டைப் பொடியை வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள், டெசர்ட் சாப்பிடும்போது, அல்லது பானங்கள் அருந்தும்போது சிறிது இந்தப் பொடியைத் தூவி சாப்பிடுங்கள்.
8. பாதாம் (Almonds)
பாதாமில் அர்ஜினைன் அதிகமுள்ளது, இது இவை இரத்தக் குழாய்களைத் தளர்த்தி இரத்த ஓட்டம் மேம்பட உதவுகிறது. அதுமட்டுமின்றி, பாதாமில் செலெனியமும் உள்ளது, இது மலட்டுத்தன்மைப் பிரச்சனைகள் சரியாக உதவுகிறது. இதில் உள்ள துத்தநாகம் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு உதவுகிறது.
9. பீட்ரூட் (Beetroot)
பீட்ரூட்டில் நைட்ரிக் ஆக்சைடு அதிகமுள்ளது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த மிகவும் உதவுகிறது. இதனால் பாலியல் விருப்பத்தை மேம்படுத்த உதவும் உணவாக இது திகழ்கிறது.
10. மக்கா (Maca)
இயற்கையின் வயாக்ரா என்றும் அழைக்கப்படும் மக்கா, ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் பாலியல் செயல்திறனை அதிகரிக்கிறது. மக்காவின் அழுத்தத்தைத் தாங்க உதவும் பண்புகள், ஹார்மோன்கள் உற்பத்திக்குக் காரணமாக இருக்கும் சுரப்பிகளுக்கு உதவுகின்றன. இந்த வேர்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், ஆற்றல் மற்றும் குழந்தை பெறும் திறனை மேம்படுத்துகிறது. நீங்கள் அருந்தும் ஏதேனும் பானம், சூப் அல்லது இனிப்பு வகைகளில் ஒரு ஸ்பூன் மக்கா பொடியைச் சேர்த்துக்கொள்ளுங்கள், அது சுவையையும் அதிகரிக்கும் உங்கள் பாலியல் ஆசையையும் அதிகரிக்கும்!
நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் இவற்றையும் அவ்வப்போது சேர்த்துக்கொள்ளுங்கள், உங்கள் காதல் வாழ்க்கை இன்னும் மகிழ்ச்சிகரமாக மாறும்!