பாலியல் என்றால் என்ன?
பாலியல் என்பது ஆணோ, பெண்ணோ தன்னுடைய இனத்தின் (Sex) தன்மையை வெளிபடுத்துவதாகும். இது சிந்தனைகள் (Thinking’s), உணர்வுகள் (Feelings), பாலியல் நடவடிக்கைகள் (Sexual Activities) என்பவற்றை உள்ளடக்கியது.
ஆரோக்கியமான பாலியல் உறவு என்றால் என்ன(Healthy Sex)?
ஒருவரின் பாலியல் உணர்வுகளை, யாரையும் துன்புறுத்தாமல், வலுக்கட்டாயப்படுத்தாமல், பாலியல் நோய் பிரச்சினையின்றி, தேவையற்ற கருத்தரித்தல் இன்றி, முறையாக வெளிப்படுத்துவதாகும்.
பால் என்றால் என்ன What is mean by Sex?
ஆண் / பெண் இருவரின் உயிரியல் தோற்றம் தொடர்பானவை
பெண்: மார்பகம்,யோனி, மாதவிடாய், XX (பெண்),
ஆண்: ஆண்குறி, விதை, விந்துற்பத்தி, XY
இருபாலினத்தவர்: XXY அல்லது XYY
பாலியல் விருப்பு என்றால் என்ன, Sexual Orientations?
எதிர்பாலுடனான ஈர்ப்பு – Desire to have sex with Opposite sex,
அதே பாலுடனான (ஓரின / தன்னின) சேர்க்கை – Desire to have sex with Same Sex, Lesbian (Female), Gay (Male),
இருபாலாருடனான ஈர்ப்பு – Desire to have sex with male and female –Bisexuals,
பாலியல் பழக்கவழக்கம் என்றால் என்ன What is mean by sexual feelings?
ஒருவரின் பாலியல் விருப்பத்தை வெளி கொண்டு வருவதற்கு செய்யப்படுபவை. உம்: தொடுதல், முத்தமிடல், தழுவல்…
பாலியல் சுழற்சி என்றால் என்ன Sexual Cycle?
பாலியல் உணர்ச்சியினால் உடலில் எற்படும் உணர்வு மற்றும் மனரீதியான மாற்றங்கள்.
இது நான்கு நிலைகளை கொண்டது…
1-தூண்டப்படுதல் Sexual Stimulation, Motivation, Excitement,
இது சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரை இருக்கலாம். அப்போது இருதய துடிப்பு, மூச்சு விடுதல் அதிகரிக்கும். ஆண்களுக்கு விதைகள் சுருங்கும் ஆண்குறியில் இரத்த ஓட்டமும் அதிகரித்து ஆண்குறி விரைக்கும்.
பெண்களுக்கு முலை காம்புகள் நேராகும், மற்றும் மார்பகங்கள் பெருக்கும்.
2-சமனிலை –Plateau
முழுமையான உணர்ச்சி நிலை அடைந்ததும் ஒரு சமனிலைக்கு உடல் வரும்..
3-உச்ச கட்டம் – Orgasm
பாலியல் உணர்வுகளின் தீடிர் வெளிப்பாடு இது சமனிலையின் உச்ச நிலையில் ஏற்படும். இது சில நொடிகளே நீடிக்கும். பெண்களில் யோனி இறுக்கமடையும். ஆண்களில் ஆண்குறி சுருங்குதலும், சுக்கில பாய்பொருள் வெளியேற்றமும்.
4-ஓய்வு நிலை Resolution..
உடல் படிப்படியான அதன்ஆரம்ப நிலைக்கு செல்லும்.
ஆண்களுக்கு ஒரு உச்ச கட்டத்தை அடந்தபின் மீண்டும் செயல்பட நேர அவகாசம் தேவை. பெண்கள் உடனேயே பல உச்சகட்டங்களை அடையலாம்.
பாலியல் பிரச்சினைகள்
ஆண்
முன்கூட்டியே விந்து வெளியேறுதல் – Premature Ejaculation
விரைப்புத்தன்மையின்மை பிரச்சினை. – Erectile Dysfunction
பெண்
யோனி இறுக்கம். Tightness of Vagina. Vaginismus
உடலுறவில் வலி, Dyspareunia,
உடலுறவில் ஆர்வமின்மை, Low sexual desires
இருபாலாருக்கும்
இன்பம் குறைவு Low Sexual Pleasure.
உச்ச கட்டத்தை அடைவதில் பிரச்சினை. Difficult to reach Orgasm,
முன்கூடி விந்து வெளியேறுதல். (Premature Ejaculation)
முன்கூட்டிய விந்து வெளியேற்றம் என்றால் ஆண் தன் துணை எதிர்பார்க்கும் நேரத்திற்கு முன் விந்து நீரை கக்கிவிடுதல் ஆகும். இதனால் தாம்பத்திய உறவில் பிரச்சினை ஏற்படலாம். இது ஆண்களிடம் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சினை ஆகும்.
எதனால் முன்கூடி விந்து வெளியேற்றம் ஏற்படுகிறது?
மன உளைச்சல் Depression, Stress.
பதற்றம், Tension,
பெண் தொடர்புகளில் பிரச்சினை – Immoral Contacts
அனுபவமின்மை Lack of Experience
நரம்புத்தளர்ச்சி Nervous Weakness,
விந்து முந்துதல் தடுப்பு சிகிச்சைகள் Premature Ejaculation Treatment,
இது ஒரு சாதாரனமான விஷயம் தான், நீங்கள் பயப்பட தேவையில்லை. இது நீஙகளும் உங்கள் துணைவியும் சேர்ந்து தீர்க்க வேண்டிய பிரச்சினை இது.
தொடந்து விந்து முந்துதல் பிரச்சனை இருப்பின் மருத்துவரை ஆலோசிக்கவும். TV க்களில் வரும் சில போலி மருத்துவர்கள் உங்களை பயமுறுத்துவார்கள். நீங்கள் பயப்பட தேவையில்லை. நன்கு படித்த அனுபவம் வாய்ந்த மருத்துவர் உங்களுக்கு சரியான வழிகாட்டி தகுந்த மருந்துகளை அளிப்பார்.
விரைப்புத்தண்மையின்மை, ஆண்மைக்குறைவு, பிரச்சினை (Erectile Dysfunction – Impotence)
விரைப்புத்தண்மையின்மை என்றால் என்ன ?
பாலியல் உறவை கொள்ளும்போது ஆண்குறி சரியாக விரைக்கவில்லை எனில் அது விரைப்புத்தண்மையின்மை ஆகும்.
இதற்கான காரணங்கள் என்னென்ன?
இது சில நோய்களாலும், உளரீதியான காரணங்களாலும் ஏற்படலாம்.
ஆண்மை குறைவை ஏற்படுத்தும் சில காரணிகள்,
நீரிழிவு நோய் – Diabetes,
புகை பிடிப்பதால் ஆண்குறிக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைதல்..
அதிகப்படியாக மது அருந்துதல் – Alcoholism,
சில மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு Adverse Drug Reactions.
நரம்பு தளர்ச்சி பிரச்சினைகள் – Nervous Weakness.
உளரீதியான காரணங்கள். Psychological Reasons
பெண் உறவுகளில் ஏற்படும் பிரச்சினை Relationship Problems.
மன உளைச்சல்/ பதற்றம் Stress / Palpitation.
மன அழுத்தம் Depression..
பாலியல் உணர்வு குறைவு Low Sexual Desires.
விரைப்புத்தண்மை குறைபாட்டை எவ்வாறு தடுப்பது,
கொழுப்பு குறைந்த உணவுகள் உட்கொள்ளவேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கை.
புகை பிடித்தலை நிறுத்தவும்.
மதுவை குறைக்கவும்
தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும்
சரிவிகித உணவு.
விரைப்புத்தண்மையின்மை, ஆண்மைக்குறைவு, பிரச்சினை (Erectile Dysfunction – Impotence) சிகிச்சை
பிரச்சினை ஆரம்பித்தவுடன் மருத்துவரை அனுகுவது நல்லது. ஏனெனில் சரியான சிகிச்சை நல்ல பலனளிக்கும்
உளரீதியான ஆலோசனை.
எந்த பிரச்சனையிருந்தாலும், உளரீதியான பாதிப்புகளை குறைக்க உளவியல் ஆலோசகரின் ஆலோசனை மிகவும் உறுதுணையாக இருக்கும்.