ரஷ்யாவில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை பாலியல் உறவில் ஈடுபடாத அல்லது பல காரணங்களால் வாய்ப்புகள் அமையாத 13 சதவிகித மக்கள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ரஷ்ய மக்களின் பாலியல் வாழ்க்கை தொடர்பில் ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் குடியிருக்கும் சுமார் 15,000 மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டின் இறுதி நாட்களை எட்டியுள்ள நிலையில் மக்களின் பாலியல் வாழ்க்கை எந்த அளவுக்கு திருப்தியாக அமைந்துள்ளது என்பது தொடர்பில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
24 வயது முதல் 45 வயது வரையான இருபாலரிடமும் கேள்விகள் முன்வைக்கப்பட்டதில் வெறும் 5 சதவிகித மக்கள் மட்டுமே தினசரி தமது துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
40 சதவிகிதம் பேர் வாரத்தில் ஒருமுறையேனும் பாலியல் உறவு வைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். எஞ்சிய 42 சதவிகிதம் பேர் மாதத்தில் ஒருமுறையேனும் உறவு வைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த ஆண்டில் இதுவரை ஒருமுறை கூட தங்கள் துணையுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதில்லை என சுமார் 13 சதவிகித ரஷ்யர்கள் தெரிவித்துள்ளனர்.
இது 8 ரஷ்யர்களில் ஒருவர் என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மட்டுமின்றி இதில் 36 சதவிகிதம் பேர் தங்களின் பாலியல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை எனவும், சுமார் 68 சதவிகித ரஷ்யர்கள் துணை இருந்தும் தனியாக வாழ்க்கை நடத்தும் சூழலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் 10 ரஷ்யர்களில் ஒருவர் தமது துணையை மாற்றியுள்ளதும் தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி 16 சதவிகித ரஷ்யர்கள் தங்கள் துணையை ஏமாற்றி வருவதும், 8 சதவிகித ரஷ்யர்கள் 3-ல் இருந்து 5 வெவ்வேறு பாலியல் உறவுக்காக மட்டும் தொடர்புகள் வைத்துக்கொள்வதும் குறித்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.