என்னுடன் பழகும் சில நண்பர்கள் பல பெண்களுடன் உ றவு கொள்கிறார்கள், இதை பார்க்கும் பொழுது இவன் கூடவா இப்படி மாறிவிட்டான் என அதிர்ச்சியில் பார்க்க வேண்டி இருக்கு. அவனை எல்லாம் நண்பன் என்று சொல்லி, எப்படி இனி வீட்டுக்கு அழைத்துச்செல்ல முடியும்? வீட்டில் இருக்கும் பெண்களையும் தவறாக தானே பார்ப்பான்? முன்பு ஏதோ ஒரு மூலையில் நடப்பதாக கேள்விப்பட்ட சம்பவம் எல்லாம், என் கண் முன்னாலே நடக்கிறது. என் நண்பனைப் போல ஊருக்கு ஒருத்தன் இருக்கான்.
இவனுகளை எல்லாம் நம்பி, பெண்கள் எப்படி போறாங்கனு தான் தெரியல. குறிப்பாக என்னுடைய நண்பன் லோன் வசூலிக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறான். வேலை நிமிர்த்தமாக நிறைய வீடுகளுக்கு செல்ல வேண்டி இருக்கும். அதில் உண்டான பழக்கத்தில், பல திருமணமான பெண்களை ஏமாற்றி உறவில் இருந்துள்ளான். “ஒரு நாள் இல்லைனாலும், ஒரு நாள் சிக்க போற, இந்த பழக்கத்த இதோட விட்டுரு” என்று எச்சரித்தும் கேட்கவில்லை. அடுத்து பள்ளி பருவத்தில் உடன் படித்த தோழிகளை பிளாக்மெயில் செய்து, அவர்களையும் ஏமாற்றியிருக்கிறான்.
பழக பழக பாலும் புளிக்கும் என்று சொன்னது எல்லாம் பொய் போல, இவன் பழக்கம் போகப்போக அதிகரித்துக்கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இனிமேலும் இவனிடம் நட்பை தொடர்ந்தால், ஊர் நம்மை காறித்துப்பும் என்று நினைத்துக்கொண்டு, மெல்ல மெல்ல அவனைவிட்டு விலகி வந்துவிட்டேன். இப்போது சமீபத்தில் அவனைப்பற்றி கேள்விப்பட்டதில், சோஷியல் மீடியாவில் பெண்களை ஏமாற்றிக்கொண்டிருப்பது தெரிய வந்தது.
ஏற்கனவே கல்லூரி படிக்கும் போது, இதே போல பெண்கள் விவராகத்தில் சிக்கி, அது போலீஸ் கேஸ் வரைக்கும் சென்றது. இப்போ மீண்டும் அதைவிட பெரிய சிக்கலில் சிக்கப்போகிறான் என்பது மட்டும் தெரிகிறது. ஏமாந்த பெண்கள் வெளிப்படையாக புகார் கொடுக்க முன்வருவதில்லை. அதில் சிலர் விருப்பப்பட்டே இவனிடம் உறவில் இருந்துள்ளனர். அந்த லிஸ்டில் என்னுடைய தோழியும் அடங்குவார். சுற்றிலும் இப்படி நடப்பதை பார்த்தால், நண்பர்கள் மீதான மதிப்பே குறையத்தொடங்குகிறது. நட்பு என்ற உறவையே கொச்சைப்படுத்திவிட்டனர்.