சினிமா நடிகைகளை திருமணம் செய்ய ஒரு வாய்ப்பு வந்தால் யார்தான் வேண்டாம் என்பார்கள். அப்படித்தான் ஒரு புதுமுக நடிகை திருமண ஆசை காட்டி வாலிபர்களை மயக்கிய பல கோடிகளை மோசடி செய்துள்ளார்.
அவரது பெயர் ஸ்ருதி. இவர் ஆடி போனா ஆவணி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இவர் திருமணத்திற்காக மேட்ரிமோனியலில் பதிவு செய்துள்ள வசதி படைத்த இளைஞர்களை குறி வைத்து இந்த மோசடிகளை நிகழ்த்தி உள்ளனர்.
இவர்களுக்கு உடந்தையாக சித்ரா மற்றும் பிரசன்னா வெங்கடேசன் என்ற இருவர் பெற்றோர் நடித்துள்ளனர். மேலும் இவர்கள் 3 பேரும் கோவையில் ஆடம்பர பங்களாவை வாடகைக்கு எடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களிடம் சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஏமாந்துள்ளார். இவரிம் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
பின்னர் தனது தாயாருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறி ரூ 45 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அவரும் வருங்கால மனைவிதானே என்று கொடுத்துள்ளார்.
அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சந்தோஷ் குமாரும் பல லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளார்.
இதே போல சிதம்பரத்தை சேர்ந்த அருள் குமரன், சந்தோஷ் குமார் என பல லட்சம் கொடுத்து ஏமாந்தவர்களின் பட்டியல் நீண்டுள்ளது.
இது குறித்து சந்தோஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றுள்ள இவர்கள் மூன்று பேரும் தற்போது தலைமறைவாக இருந்தனர்.
இவர்கள் தற்போது போலீசாரிடம் வசமாக மாட்டி கொண்டனர். இவர்கள் இன்னும் பலரிடம் பல கோடி வரை மோசடி செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.