Home ஆரோக்கியம் பற்களின் மஞ்சள் கறையை உடனடியாகப் போக்கும் பிரிஞ்சி இலை

பற்களின் மஞ்சள் கறையை உடனடியாகப் போக்கும் பிரிஞ்சி இலை

32

பற்களில் உண்டாகும் கறைகள் நம்மை மற்றவர்கள் முன் வாய்விட்டு சிரிக்க சங்கடப்படுத்துகிறது என்பது ஒருபுறமிருக்க வாயில் உண்டாகும் துர்நாற்றம், கறைகள் ஆகியவை நமக்கே ஒருவித கூச்சத்தை ஏற்படுத்துவதோடு, முக அழகையும் கெடுத்துவிடுகிறது.

பற்கள் முகத்தையும் வசீகரப்படுத்துகிறது. தற்போது ஏராளமான டூத் பேஸ்ட்கள் சந்தைகளில் போட்டிப் போட்டுக் கொண்டு இறங்கியிருக்கிறேதே தவிர, அவை அவ்வளவாக நமக்கு நிரந்தரப் பலன்களைத் தருவதாக இல்லை.

ஆனால் நம்முடைய வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில எளிய பொருட்களைக் கொண்டே நம்முடைய பற்களை முத்துப்போல் வெண்மையாகப் பிரகாசிக்கச் செய்ய முடியும்.

பற்களின் நலனில் நம்மைவிட எலுமிச்சைக்கு அதிக அக்கறையுண்டு. பற்களுக்குத் தொடர்ந்து எலுமிச்சையைப் பயன்படுத்தி வந்தால் இயற்கையாகவே வெண்மையாக மாறிவிடும். அதிலும் எலுமிச்சையில் உப்பு சேர்த்துத் தேய்க்க வேண்டும்.

பற்களைப் பளிச்சிடச் செய்யும் வீட்டு வைத்தியப் பொருட்களில் ஒன்று கடுகு எண்ணெய். கடுகு எண்ணெயுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் போல செய்து பல் துலக்கப் பயன்படுத்தலாம்.

பேக்கிங் சோடாவில் உப்பு சேர்த்துப் பயன்படுத்தலாம். பேக்கிங் சோடா பற்களை ஜொலிக்க வைக்கும்.

பழங்காலத்தில் பேஸ்ட் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்படாத போது, நம்முடைய முன்னோர்கள் சாம்பலைத் தான் பயன்படுத்தினார்கள். சாம்பலைக் கொண்டு பல் துலக்கிளால் பற்கள் அதிக வலுவோடு இருக்கும்.

பற்கள் பளிச்சிட வேண்டுமென விரும்புபவர்கள் ஆரஞ்சுத் தோல் அல்லது ஆரஞ்சுக்கூழ் கொண்டு பல் துலக்கலாம். இது பற்களை மின்னச் செய்வதோடு வாய் துர்நாற்றம் உண்டாகாமலும் தவிர்க்கலாம்.

நீரில் சிறிது வினிகரைக் கலந்து, தினமும் மௌத்வாஷ் போல பயன்படுத்தி வர, வாய் துர்நாற்றம் நீங்கும். பற்களின் கறைகளும் மறையும்.

மேற்கண்ட குறிப்புகளையெல்லாம் நாம் பெரும்பாலும் நிறைய இடங்களில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பிரியாணி இலையைக் கொண்டு பற்களை வெண்மையாகப் பளிச்சென மாற்ற முடியும் தெரியுமா?

ஆம். சில பிரியாணி இலைகளைப் பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் 1/4 ஸ்பூன் அந்த பிரியாணி இலைப் பொடியுடன் எலுமிச்சை சாறினைச் சேர்த்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டைக் கொண்டு பல் துலக்கினால் பற்கள் முத்துப்போல் மின்ன ஆரம்பிக்கும். முயற்சி செய்து பாருங்கள்.