பருக்களைப் போக்க ஆல்கஹால் பயன்படும். ஏனெனில் ஆல்கஹாலில் பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் வடுக்களைப் போக்கும்
பொருட்கள் உள்ளது.
விஸ்கியைப் பயன்படுத்தி ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சீக்கிரம் பருக்களைப் போக்கலாம். குறிப்பாக சென்சிடிவ் சருமம்
உள்ளவர்களுக்கு விஸ்கி சற்று எரிச்சலை ஏற்படுத்தும். ஆகவே சென்சிடிவ் சருமத்தினர் விஸ்கியை நீரில் கலந்து பயன்படுத்தலாம்.
ஒரு எலுமிச்சையைக் பிழிந்து சாறு எடுத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் விஸ்கியை சேர்த்து கலந்து, பஞ்சு பயன்படுத்தி முகத்தில் தடவி
சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், ஒரே வாரத்தில் பருக்கள் மறைந்து, முகம் பொலிவோடு
இருப்பதைக் காணலாம்.
1 ஸ்பூன் விஸ்கியுடன் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்றாக கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ
வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் பருக்களை விரைவில் மறையும்.
க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இது பருக்களால் சரும செல்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களைத் தடுக்கும். அத்தகைய
க்ரீன் டீயை, 1 டேபிள் ஸ்பூன் விஸ்கியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவினால், பருக்கள் படிப்படியாக மறைந்துவிடும்.