குழந்தையுடன் பயணிப்பது சோர்வை ஏற்படுத்தலாம். அதனால் பயணிக்கும் போது பலரும் தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்ல தவிர்த்து விடுவார்கள். ஏனெனில் குழந்தை அழ தொடங்கி விட்டால், அதனை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.
குழந்தை பெறுவதற்கு முந்தைய அனைத்து ஓய்வுக்கான சுற்றுலாக்கள் மற்றும் பயணங்கள் இருந்ததை போல, தற்போது குழந்தையுன் செல்லும் போது சுற்றுலாவோ பயணமோ சிறப்பாக இருப்பதில்லை. பயணிக்கும் போது குழந்தைகளை எப்படி பராமரிக்க போகிறோம் என்ற பயத்திலேயே தான் நம் பயணம் கழியும். குழந்தைகளின் சௌகரியம், அவர்களின் தேவைப்பாடுகள், பாதுகாப்பு மற்றும் பொழுதுபோக்கை நீங்கள் கவனிக்க வேண்டும். சிறியதோ பெரியதோ, அனைத்து விதமான அவசரங்களையும் சமாளிக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
மேற்கூறிய காரணிகளைக் கருதிய பிறகும் கூட நாம் ஏதாவது ஒன்றை மறக்கவே செய்வோம். அதனை எப்படியாவது செய்து முடிக்கும் வரை நமக்கு நிம்மதியே இருக்காது. உண்மை என்னவென்றால் குழந்தை என வரும் போது நம்மால் எதையும் விட்டு விட முடியாது. அதனால் தான் பயணிக்கும் போது குழந்தைகளை எப்படி பராமரிப்பது என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த காரணத்திற்காக நாங்கள் உங்களுக்கு சில டிப்ஸ்களையும், சில எளிய வகை பராமரிப்பு பற்றியும் கூற போகிறோம்.
டிப்ஸ் *1
பயணிக்கும் போது அசுத்தத்தை உண்டாக்குகிற உணவாக இல்லாமல், உண்ணுவதற்கும் எடுத்துச் செல்வதற்கும் சுலபமாக உள்ள உணவுகளை எடுத்துச் செல்லுங்கள். இதனால் உணவு சுத்தமாக இருப்பதை நாம் உறுதி செய்து கொள்ள முடியும். மேலும் உணவை தேடி ஆங்காங்கே அலைய வேண்டியதில்லை. உங்கள் குழந்தைக்கு விருப்பமான நொறுக்குத்தீனிகளை அள்ளிச் செல்லுங்கள். வழியில் ரோட்டு கடையில் காணும் தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்தால், சிறு குழந்தைகளுக்கு சுலபமாக வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
டிப்ஸ் *2
உங்கள் குழந்தையின் வயது மிகவும் குறைவாக இருந்து இன்னமும் புட்டிப்பால் குடித்து வந்தால், அதற்கான உபகரணங்களை ஸ்டெரிலைஸ் செய்ய மறக்காதீர்கள். குழந்தைக்கான நாற்காலி போன்ற எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய சில உபகரணங்களை எடுத்துச் சென்றால் குழந்தை சௌகரியமாக இருக்கும்.
டிப்ஸ் *3
வெகு சீக்கிரமாகவே குழந்தைக்கு எரிச்சல் ஏற்பட்டு அழ தொடங்கலாம். அதனால் அப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிக்க முன்னரே நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அதனால் உங்களுடன் சிறிய, கனமில்லாத விளையாட்டு பொம்மைகளை எடுத்துச் செல்லுங்கள். இதனால் பயணிக்கும் போது உங்கள் குழந்தைகளுக்கு பொழுது போகும். இது புதிய விளையாட்டு பொருட்களாக இருந்தால், குழந்தை நீண்ட நேரம் அதனை வைத்து விளையாடும். இது அவர்களின் சலிப்பை நீக்கி குதூகலப்படுத்தும்.
டிப்ஸ் *4
நீண்ட தூர பயணம் என்றால் உங்களின் லேப்டாப் அல்லது டேப்லெட்டில் குழந்தைக்கு படங்களை போட்டு காண்பியுங்கள். இது சற்று பெரிய குழந்தைகளுக்கு சந்தோஷத்தை அளிக்கும்.
டிப்ஸ் *5
பயணிக்கும் முன்பு குழந்தை மருத்துவரை சந்திக்க மறந்து விடாதீர்கள். அவர்களுக்கு தேவையான மருந்துகளை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யுங்கள். மருத்துவரின் அழைப்பேசி எண்ணையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மேலும் பிளாஸ்டர், வலி நிவாரணி போன்றவைகள் அடங்கிய முதலுதவி பெட்டியையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
டிப்ஸ் *6
கடைசியாக, வீட்டில் கடைப்பிடிக்கும் அனைத்து விதிமுறைகளையும் சுற்றுலாவிலும் கடைப்பிடிக்காதீர்கள். நெகிழ்வு தன்மையோடு இருந்து, குழந்தைகள் மகிழ்ச்சியோடு இருக்க சௌகரியமான மாற்றங்களை ஏற்படுத்துங்கள்