Home ஆரோக்கியம் பொது மருத்துவம் படுக்கைக்குப் போகும் முன் சுடுநீரில் குளிக்காதீங்க!

படுக்கைக்குப் போகும் முன் சுடுநீரில் குளிக்காதீங்க!

10

உறக்கம் என்பது உடலுக்கு கிடைக்கும் ஓய்வு. உறங்கும் நேரத்தில் தெரியாமல் செய்யும் சில தவறுகளால் இரவில் உறக்கம் வராமல் தவிக்க வேண்டியிருக்கும். எனவே படுக்கைக்கு போகும் முன் என்னென்ன செய்யக்கூடாது என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

உடற்பயிற்சி வேண்டாமே

படுக்கைக்குப் போகும் முன் உடற்பயிற்சி செய்ய வேண்டாமே. ஏனெனில் உடல் சூடாகி வியர்வை சுரக்க ஆரம்பித்துவிடும் இதுவே தூக்கத்தை கெடுத்துவிடும்.

டிவி நெட் நிறுத்துங்க

உறங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக டிவி, நெட் பார்ப்பதை நிறுத்திவிடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் படுக்கைக்கு போகும் வரை டிவி, இன்டர்நெட் பார்ப்பது ஹார்மோன் பிரச்சினையை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுத்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

சுடுநீரில் குளிக்காதீங்க!

உறங்கும் போது உடற்பயிற்சி செய்யக்கூடாது என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல சுடுநீரில் ஷவரில், பாத்டப்பில் குளிப்பது கூடாதாம். இதனால் வியர்வை அதிகம் பெருகி டென்சனை ஏற்படுத்திவிடும். அப்புறம் உறக்கத்தை தொலைத்துவிட்டு விடிய விடிய விழித்திருக்க வேண்டியதுதான்.

காபி, ஆல்கஹால் வேண்டாமே

அதிக அளவில் காபின் நிறைந்த காபி, மதுபானங்கள் குடிப்பது ஆபத்து என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் அடிக்கடி பாத்ரூம் போக எழுந்திருக்க வேண்டும். இதனால் உறக்கம் கெடும் என்கின்றனர்.

வேலைக்கு நோ

எந்த வேலையாக இருந்தாலும் இரவில் அதிகநேரம் விழித்திருந்து பார்க்க வேண்டாம். ஏனெனில் மூளையை ஓய்வெடுக்க விடாமல் செய்வதால் அப்புறம் உறக்கம் நிரந்தரமாக தடை பட்டுவிடும். எந்த வேலை என்றாலும் இரவில் நன்றாக தூங்கி பகலில் சீக்கிரம் பார்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

திகில் கதைகள் படிக்க வேண்டாம்

படுக்கையில் அமர்ந்து கொண்டு பேய், பூதம், கொலை போன்ற திகில் கதைகளை படிக்கவேண்டாம். அப்புறம் பாதியில் விட்டு விட்டால் திடீர் என்று முழிப்பு வந்து கதையை படிக்கத் தொடங்கிவிடுவீர்கள். அப்புறம் தூக்கம் கோவிந்தாதான்.

செல்லப்பிராணிகளை கொஞ்சவேண்டாம்

படுக்கை அறையில் படுக்கப் போகும் முன் செல்லப்பிராணிகளை கொஞ்சுவதை தவிர்க்கவும். ஏனெனில் செல்லப்பிராணிகளின் உடம்பில் இருக்கும் குட்டிப்பூச்சிகள் உடம்பில் ஏறினால் அது இம்சையை ஏற்படுத்திவிடும். எனவே செல்லக்குட்டிகளை பகல்பொழுதுகளில் கொஞ்சுங்கள்.

சீரியஸா பேசாதீங்க

உறங்கும் நேரத்தில் தம்பதியரிடையே சீரியசான பேச்சுக்கள், சண்டைகள் வேண்டாம். எதுவாக இருந்தாலும் படுக்கை அறைக்கு வெளியே வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் சீரியசான பேச்சும் சண்டையும் தூக்கத்திற்கு வேட்டு வைத்துவிடும்.