தேவையானப் பொருட்கள்:
பச்சை பட்டாணி – 1/4 கிலோ
பெரிய வெங்காயம் – 1
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 3 பல்
கார்ன் ஃப்ளார் மாவு – 1/2 மேஜைக்கரண்டி
செலரி – 1 (விருப்பப்பட்டால்)
கொத்தமல்லி தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
செய்முறை :
cooking* பட்டாணியை வேக வைத்து, மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
* இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.
* வாணலியில் வெண்ணெய் விட்டு உருகிய பின், வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். (செலரி சேர்ப்பதாக இருந்தால் அதையும் பொடியாக நறுக்கி சேர்க்கவும்).
* கார்ன் ஃப்ளார் மாவை அதனுடன் சேர்த்து வதக்கவும்.
* அரைத்த பட்டாணியை சூப் வடிகட்டியில் வடித்து, வதக்கியதுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
* உப்பு, மிளகு தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
* பரிமாறும் போது, மேலாக க்ரீம் விட்டு பரிமாறவும்.