தேன் என்றாலே உயர்வானது, எல்லா வியாதிக்கும் அருமருந்து என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் தேன் மலரில் உள்ளபோது சுத்தமாகவே உள்ளது. பின்பு தேனீயால் எடுக்கப்பட்டு தேன்கூட்டில் சேகரிக்கப்பட்டு அதனை எடுத்து நாம் உபயோகிக்கும்போது அதில் அலர்ஜியை உண்டாக்கும் மகரந்த தூள்களும், மிக கடுமையான பொடுலிசம் (BOTULISM)ன்ற உண்டாக்கும் Clostridium bacteria இருக்கலாம்.
எனவே குழந்தைகளுக்கு குறிப்பாக ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் தரவே கூடாது.
BOTULISM வந்தால் தெரியும் அறிகுறிகள் : (பச்சிளம் குழந்தைகள்)
உடல் தளர்ச்சி – குழந்தையை தூக்கினால் விறைப்பாக இல்லாமல் தளர்வாக இருப்பது.
பால் குடிக்க – மறுப்பது
சோம்பலாக – அழுவது (WEAK CRY)
மலச்சிக்கல்
எனவே தேனை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு வயது குறைவான குழந்தைகளுக்கு உபயோகிக்கக் கூடாது.
அலர்ஜி, ஆஸ்த்மா உள்ள குழந்தைகளுக்கு ஒரு வயதுக்கு பின்னும் தேன் தராமல் இருப்பது நல்லது.
இந்த மாதிரி அலர்ஜி, ஆஸ்த்மாவால் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்றோர்கள் தனிக் கவனம் செலுத்தி வளர்க்க வேண்டும்