Home சமையல் குறிப்புகள் பசலைக்கீரை பருப்பு சூப்

பசலைக்கீரை பருப்பு சூப்

31

தேவையான பொருட்கள்:
1459757948-4575 (1)
பசலைக் கீரை (பொடியாக நறுக்கியது) – 1 கோப்பை
பயத்தம் பருப்பு – 50 கிராம்
தண்ணீர் – 500 மி.லி.
தக்காளிப் பழம் (பொடியாக நறுக்கியது) – 2
கொத்தமல்லிப்பொடி – 1 மேசைக்கரண்டி
சீரகப்பொடி – அரை தேக்கரண்டி
வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பூண்டு – 2 பற்கள்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1
எலுமிச்சம் பழச்சாறு – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
மிளகுத்தூள் – தேவைக்கேற்ப

செய்முறை:

பருப்புடன் தண்ணீர் சேர்த்து பருப்பு மென்மையாகும் வரை வேக வைக்கவும். சூப் வடிகட்டியின் மூலம் வடிகட்டிக் கொள்ளவும்.

வெண்ணெயை உருக்கி, வெங்காயத்தையும் பூண்டும் அதில் வதக்கவும்.

பிறகு அத்துடன், பசலைக் கீரையை சேர்த்து வேக வைக்கவும்.

சீரகப்பொடி, கொத்தமல்லி பொடி, பொடியாக நறுக்கிய தக்காளீப் பழம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

பருப்பு, உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் சுட வைக்கவும். பிறகு எலுமிச்சம் பழச்சாற்றைச் சேர்க்கவும்.

நன்கு வதக்கிய வெங்காயம் மற்றும் எலுமிச்சம் பழவில்லைகளோடு சூப்பைப் பரிமாறவும்.