Home ஆரோக்கியம் நோய்களின் அறிகுறியாக உள்ள வாய் துர்நாற்றம்!

நோய்களின் அறிகுறியாக உள்ள வாய் துர்நாற்றம்!

15

வாய் துர்நாற்றம் என்பது லேசாக அனைவரிடமும் உள்ளது தான். ஆனால் சிலர் வாயை திறந்தாலே எதிரில் உள்ளவர்கள் சகித்துக்கொள்ள முடியாதளவுக்கு இருக்கும். பல்துலக்காமல் இருப்பதாலும், வாயை சரியாக பராமரிக்காமல் இருப்பதாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும் அதையும் தாண்டி பல்வேறு காரணங்கள் உள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். வாய் துர்நாற்றம் என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளகூடாது. அது பல்வேறு நோய்களின் அறிகுறியாக உள்ளது.
தொண்டையில் ஏற்படும் தொற்று மற்றும் சளி பிரச்சனை உள்ளவர்களுக்கும், கல்லீரல் பிரச்சனை உள்வர்களுக்கும், சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கும், அல்சர், குடல் நோய், குடல்வாய் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் மிக அதிகமாக வாய் துர்நாற்றம் கடுமையாக இருக்கும். அஜீரரணக் கோளாறு. வாயுக் கோளாறு, முரசு கரைதல் போன்ற காரணிகளாலும் முக்கியமாக வாய்ப்புற்றுநோய்க்கும் அறிகுறியாக வாய் துர்நாற்றம் வீசச் செய்கின்றது. மிக அதிகமானவர்கள் அவர்களுக்கு தெரியாமலே வாய்ப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக அளவு மாத்திரை உட்கொள்வதால் வாய் அதிக அளவில் வறட்சியடைகிறது. குறிப்பாக ஆன்டி-டிப்ரசண்ட், வலி நிவாரணி போன்ற மாத்திரைகள் வாயை வறட்சியடையச் செய்யும். இதனால் எச்சில் வறட்சியடைந்து வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும்.
வாய் துர்நாற்றத்தை முற்றிலும் தடுப்பதற்கான சில வழிமுறைகள். இரவு சாப்பிட்ட பிறகு பல்துலக்கிவிட்டு தூங்குங்கள். காலை உணவை தவிர்க்ககூடாது. டயட் இருப்பவர்கள் அதிக அளவில் தண்ணீர் மற்றும் சமகால இடைவெளியில் சமச்சீரான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். க்ரீன்டீ, பாலாடைகட்டி, கேரட், புதினா, எள் ஆகியவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.