Home பாலியல் நோயை விரட்ட தினந்தோறும் செக்ஸ்!

நோயை விரட்ட தினந்தோறும் செக்ஸ்!

19

intimacy passions treatment counseling specialsit dr.sendhil kumar vivekananda clinic velachery, chennai, panruti, cuddalore, pondycherry, tamilnaduஆங்கிலத்தில் ஆப்பிள் பழத்தின் மகிமையை பற்றி சொல்வதற்காக”An apple a day keeps the doctor away” ( தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டாம்) என்ற ஒரு பழமொழி வெகு பிரசித்தம். அதே மாதிரிதான் “Have sex everyday to keep diseases away”- தினந்தோறும் செக்ஸ் வைத்துக்கொண்டால் நோய் அண்டாது- என்று மருத்துவர்கள் தற்போது சொல்ல தொடங்கி உள்ளனர்.

நாள்தோறும் அல்லது அடிக்கடி செக்ஸ் என்பது உங்களது மனதிற்கும், உடலுக்கும் இன்பத்தையும், உற்சாகத்தையும் தருவதோடு மட்டுமல்லாது, கலோரிகளை எரித்து கொழுப்பை குறைக்கிறது; மன அழுத்தத்திலிருந்து விடுபட வைக்கிறது என அதன் பயனை ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம் என்கிறார்கள் பாலியல் மருத்துவ நிபுணர்கள்.

அவர்கள் பட்டியலிடும் அவ்வாறன பயன்கள் சில வருமாறு:

இருதயக்குழாய் செயல்பாட்டை மேம்படுத்துகிறது:

ஒரு வாரத்தில் இரண்டு தடவைக்கும் அதிகமாக செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆண்களுக்கு, மாதம் ஒருமுறை செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆண்களை விட மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

அடிக்கடி பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் தம்பதியர்களுக்கு வழக்கமாக ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்கள் தாக்காதவாறு,’immunoglobulin A’ என்ற நோய் எதிர்ப்பு சக்தி அவர்களது உடலில் அதிகரிக்கிறது.

மன அழுத்தத்தை குறைக்கிறது:

பலருக்கு அலுவலக பிரச்சனை அல்லது குடும்ப பிரச்சனை என்று ஏதாவது ஒரு பிரச்சனை வாட்டிக்கொண்டிருக்கும்.இதனால் அவர்கள் அத்தகைய சமயங்களில் மிகுந்த மன அழுத்தத்துடனேயே காணப்படுவார்கள்.இதனால் கோபப்படுவது, அருகில் இருப்பவர்களிடம் எரிந்து விழுவது என இவர்கள் தாமும் துன்பப்பட்டு,மற்றவர்களையும் மன வேதனைக்கு ஆளாக்குவார்கள்.

சமயங்களில் இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் அது மன நல வியாதிக்கே கூட கொண்டுசென்று விடும்.இத்தகைய நபர்கள் படுக்கை அறையினுள் நுழையும் முன்னர் பிரச்சனைகளையும் வெளியிலேயே விட்டுவிட்டு,தமது ஜோடியுடன் அடிக்கடி ஆரோக்கியமான செக்ஸ் வைத்துக்கொள்ளும் பட்சத்தில், மன அழுத்தம் அடியோடு குறைவதோடு, பிரச்சனைகளுக்கான தீர்வை யோசிக்கவும் மகிழ்ச்சியுடன் வாழவும் முடியும் என்று அடித்துக் கூறுகின்றனர் இத்துறையின் மருத்துவ நிபுணர்கள்.

வலிகளிலிருந்தும் நிவாரணம்:

சிலருக்கு சமயங்களில் தலைவலி மண்டையை பிளக்கும்.இத்தகைய நபர்களிடம் அவர்களது இணை, செக்ஸ் வைத்துக்கொள்ளும் நோக்கத்துடன் அணுகினால்,” போப்பா! எனக்கே தலைவலி மண்டையை பிளக்குது;இதுல இது ஒண்ணுதான் குறைச்சல்…!” என்று எரிந்து விழுவார்கள். ஆனால் செக்ஸ் வைத்துக்கொள்வதை தவிர்க்க தலைவலியை ஒரு காரணமாக சொல்லாதீர்கள் என்று கூறுகின்றனர் இத்துறை மருத்துவ நிபுணர்கள்.

தலைவலி இருக்கும்போது செக்ஸை தவிர்ப்பதற்கு பதிலாக, அதனை வைத்துக்கொண்டால், அப்போது ஏற்படும் உச்சக்கட்டம் எனப்படும் “ஆர்கஸம்” (orgasm) உங்களது தலைவலியை விரட்டியடித்துவிடும் என்கிறார்கள். அதாவது ஆர்கஸத்தின்போது ஹார்மோன் ஆக்ஸ்டாசினின் அளவு ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்றும், இது வலிகளை குறைக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆயுளை கூட்டுகிறது:

ஒருவருக்கு செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது ஏற்படும் ஆர்கஸத்தின்போது “dehydroepiandrosterone” என்று அழைக்கப்படும் ஹார்மோன் சுரக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிப்பதோடு,உடல் திசுக்கள் கோளாறை சரி செய்து,தோலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. வாரத்திற்கு இரண்டு முறையாவது ஆர்கஸம் உணர்வை எட்டும் ஆண்கள், சில வாரங்களுக்கு ஒரு முறை மட்டும் அதனை அனுபவிக்கும் ஆண்களைக் காட்டிலும் கூடுதல் ஆயுளை பெறுகிறார்கள்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது:

நீங்கள் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது உங்களது ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. உங்களது உடல் உறுப்புகள் மற்றும் உயிரணுக்களுக்கு புதிய ரத்தம் பாய்ச்சப்படுகிறது.பயன்படுத்தப்பட்ட ரத்தம் வெளியேற்றப்படும்போது உங்களது உடல் நச்சுபொருட்கள் மற்றும் இதர பொருட்களை வெளியேற்றுகிறது.இதனால்தான் செக்ஸ்-க்கு பின்னர் உங்களது உடல் சோர்வடைவதாக நீங்கள் உணர்கிறீர்கள்.

நல்ல உறக்கம் தரும்:
செக்ஸ்-க்கு பின்னர் உடல் சோர்வடையும்போது தூக்கம் தானாகவே கண்களை தழுவும். சிலர் தூக்கத்திற்காக மாத்திரை,மருந்துகளையெல்லாம் நாடுவார்கள்.அவற்றையெல்லாம் தூக்கி தூர எறிந்துவிட்டு, ஆரோக்கியமான செக்ஸ் வைத்துக்கொண்டாலே தூக்கம் சொக்கும். இவ்வாறு நன்றாக தூங்கி எழுவதன் மூலம் உங்களது உடல் மற்றும் மனது ஆகிய இரண்டுமே புத்துணர்ச்சி பெற்று அடுத்த நாள் பணியை நீங்கள் சுறுசுறுப்பாக ஆற்ற வைக்கும்.

உடல் கட்டமைப்பு மேம்படும்:

பலர் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வீட்டிலோ அல்லது உடற்பயிற்சி கூடத்திலோ பல உடற்பயிற்சிகளை செய்வது வழக்கம்.உடல் கட்டுகோப்புக்கு இது ஒரு வழி முறை என்றாலும், மாற்று வழி ஒன்றும் உள்ளது.அதுதான் அடிக்கடி செக்ஸ் வைத்துக்கொள்வது.அரைமணி நேரம் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது உடலில் 80 க்கும் அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகின்றனவாம். எனவே அடிக்கடி வைத்துக்கொள்வதும் கட்டுடலுக்கு ஒரு மாற்று வழி என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள்.