உடலை ஆரோக்கியமாகவும் எந்த நோயும் நம்மை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ள தினமும் சில பயிற்சிகளை முறையாகப் பின்பற்றினாலே போதும்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஊட்டச்சத்துடைய உணவுகள், முறையான உடற்பயிற்சி ஆகிய சிறுசிறு விஷயங்களை முறையாகப் பின்பற்றினாலே போதும்.
அப்படி என்னவெல்லாம் செய்தால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ முடியும்.
தினமும் சூரிய உதயத்துக்கு முன்பாக எழுந்திருக்க வேண்டும்.
ஒருபோதும் காலை உணவைத் தவிர்க்கவே கூடாது.
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம்
தினமும் 5 முறையாவது இரண்டு இரண்டு டம்ளர் வீதம் தண்ணீர் குடியுங்கள்.
வெளியில் ஹோட்டல்களில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுங்கள்.
இன்டர்நெட்டில் எப்போதும் மூழ்கியிருப்பதை குறைத்திடுங்கள்.
தினமும் ஒரு மிண நேரமாவது நடைப்பயிற்சி செய்யுங்கள்.
பர்கர், சாண்ட்விச் போன்ற துரித உணவுகளைத் தொடவே கூடாது.
இரவில் 8 மணி நேரமாவது தூங்குவது கட்டாயம் அவசியம்.
நேரம் கிடைக்கும்போது சைக்கிளிங் செய்யுங்கள்.
லிஃப்ட்டை தவிர்த்து படிக்கட்டுகளில் ஏறி இறங்குங்கள்.
ஒரு நாளைக்கு இரண்டு கப் கிரீன் டீ குடியுங்கள்.
வாய்விட்டு சிரியுங்கள்.
10 நிமிடங்கள் மூச்சை உள்ளிழுத்து வெளியேவிட்டு மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்.
வெறும் கால்களில் புல்வெளியில் நடக்கலாம்.
சர்க்கரையை தவிருங்கள்.
பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அவ்வப்போது பழைய நண்பர்களுடன் போனிலோ நேரிலோ பேசுங்கள்.