Home சமையல் குறிப்புகள் நெய் மீன் வறுவல்

நெய் மீன் வறுவல்

24

நெய் மீன் வறுவல்தேவையான பொருட்கள்

நெய் மீன் /வஞ்சர மீன் துண்டுகள் – 4
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூஸ்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
தனியாத்தூள் – 1/2ஸ்பூன்
சீரகத்தூள் – 1/2ஸ்பூன்
சோளமாவு – 3 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 50கிராம்
எலுமிச்சை சாறு – சிறிது
எண்ணெய் – தேவைக்கு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1.மீனை நன்றாக சுத்தம் செய்து மேலே குறிப்பிட்ட மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

2பேனில் தேவைக்கு எண்ணெய் ஊற்றி மீனை பொறிக்கவும்..

3.இருபுறமும் திருப்பி போட்டு பொறித்து எடுக்கவும்.

4.பிறகு அதே எண்ணெயில் பொடியாக அரிந்த சின்ன வெங்காயத்தை பொறித்து எடுக்கவும்.

5.இதனை பொறித்த மீன் துண்டுகள் மீது தூவி சூடாக பரிமாறவும்