Home இரகசியகேள்வி-பதில் Tamil sex doctor kelvi நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் விந்தணுக்கள் எண்ணிக்கை குறையுமா?

Tamil sex doctor kelvi நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் விந்தணுக்கள் எண்ணிக்கை குறையுமா?

310

tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, tamilsex.com, tamil sex videos, antharangam, antharanka thakaval, studant sexy, sex teacher, antharanka kathal, doctor tipsகடந்த பத்தாண்டு காலகட்டத்தில் ஆண்களின் விந்தின் தரம் படிப்படியாகக் குறைந்துவருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான முக்கியமான காரணம் என்ன என்பது இன்னும் பிடிபடவில்லை, இதைப் பற்றிய விவாதங்கள் இன்றளவும் தொடர்கின்றன.

நீண்ட காலமாக அதிக உடலுழைப்பின்றி இருப்பதும் உட்கார்ந்தே வேலை செய்து வருவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என்று கருதப்படுகிறது.

விந்தின் தரமும் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கமும் (Semen Quality and Television viewing)

ஹார்வார்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்று பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் இதழில் வெளிவந்தது. 18 முதல் 22 வயது வரையுள்ள ஆரோக்கியமான வாலிபர்கள் 189 பேரைக் கொண்டு நடத்தப்பட்ட அந்த ஆய்வில், தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் உடலுழைப்பு ஆகிய இரண்டுக்கும், விந்தின் தரம் குறைவதற்கும் தொடர்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட முக்கியமான விஷயங்களில் சில:

வாரத்திற்கு 20 மணிநேரத்திற்கும் அதிகமாக தொலைக்காட்சி பார்த்த ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையானது, தொலைக்காட்சி பார்க்காத ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையைவிட 44% குறைவாக இருந்தது.
வாரத்திற்கு 15 மணிநேரம் அல்லது அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையானது, வாரத்திற்கு 5 மணிநேரத்திற்கும் குறைவாக உடற்பயிற்சி செய்த ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையைவிட 73% அதிகமாக இருந்தது.
உடலுழைப்பு (Physical Activity)

உடலுழைப்பு குறைவாக இருப்பதற்கும் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கும் தொடர்பு இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. உடலுழைப்பு போதிய அளவு இருந்தால் நீரிழிவுநோய், உடல் பருமன், இதயம் இரத்த நாளம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவை வரும் வாய்ப்பு குறைவதுடன் பல்வேறு நன்மைகளும் கிடைக்கும். அதே சமயம் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பொருள் திறன் சமநிலையின்மைக்கும் உடலுழைப்புக்கும் தொடர்புள்ளது. பல்வேறு நோய்கள் மட்டுமின்றி ஆண்களின் மலட்டுத்தன்மையிலும் இந்த சமநிலையின்மை முக்கியப் பங்கு வகிக்கிறது.

அதே சமயம், அளவுக்கு அதிகமான கடுமையான உடற்பயிற்சியாலும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அறியப்பட்டுள்ளது. தொடர்ந்து மிதமான அளவு உடற்பயிற்சி செய்வது, எதிர்விளைவை ஏற்படுத்தக்கூடிய ஆக்சிஜன் பொருள்கள் உற்பத்தியாவதைத் தடுத்து, ஆக்சிஜனேற்ற சேதத்திலிருந்து ஆண்களின் கருச்செல்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க உதவும்.

விதைப்பை வெப்பநிலை (Scrotal Temperature)

அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதால் விதைப்பையின் வெப்பநிலை சிறிய அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. விதைப்பையின் வெப்பநிலை அதிகரித்தால், விந்தணுக்களின் உற்பத்தி குறையலாம்.

விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதால் ஆண்களின் குழந்தை பெறும் திறன் குறையும். ஆனாலும் இந்தப் பாதிப்பு ஏற்பட்ட ஆண்களும் குழந்தை பெற முடியும்.

இறுதிக் கருத்து (Conclusion)

தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைத்து, நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதைத் தவிர்த்து, தொடர்ந்து மிதமான அளவு உடற்பயிற்சி செய்துவந்தால், இனப்பெருக்க வயதுள்ள ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உடலுறவில் பெண்களுக்கு ஈடுபாடு இல்லாமல் போக காரணம் என்ன?

ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் உடலுறவில் மிகக்குறைந்த அளவு மட்டுமே சுகத்தை அனுபவிக்கின்றனர். ஒரு சில பெண்கள் உடலுறவை அறவே வெறுக்கவும் செய்கின்றனர். ஒரு குடும்பத்தில் கணவனக்கு அதிக ஈடுபாடு இருந்து, பெண்ணுக்கு இதில் நாட்டமில்லை என்றால் அந்த உறவு திசை திரும்பி போக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
பெண்களுக்கு உடலுறவில் அதிக நாட்டமில்லாமல் போக ஹார்மோன்கள் மற்றும் மனநிலை ஆகியவை காரணமாக அமைகின்றன. இந்த பகுதியில் பெண்களுக்கு உடலுறவில் நாட்டமில்லாமலும், குறைந்த இன்பம் ஆகியவற்றிக்கு காரணமான விஷயங்களை பற்றி இந்தப்பகுதியில் காணலாம்.

உடல்பருமன் உடல்பருமன் அதிகமாக இருப்பது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இது மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. அதிகமான கொழுப்பு, மூச்சி விடுவதில் சிரமம், பாதுகாப்பின்மை போன்றவை மன அழுத்தத்தால் உண்டாகின்றன. தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது நடப்பது, உடல் பருமனை குறைத்து உங்களை உடலுறவில் சிறப்பாக செயல்பட வைக்கும்.

உடல் மற்றும் மனம் சில பெண்கள் உடலுறவில் இன்பத்தை அனுபவிக்காமல் இருக்க உடல் மற்றும் மன அழுத்தம் காரணமாக உள்ளது. இதற்கு வீட்டில் உள்ள நிதி பிரச்சனை, குடும்பத்தில் சண்டை, அதிக உடல் எடை, வேலைச்சுமை ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

விட்டமின் அளவு குறைவு உடலில் போதுமான அளவு சத்துக்கள் இல்லாமல் இருப்பதும் உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போவதற்கு முக்கிய காரணமாக இருக்கும். எனவே போதிய ஊட்டச்சத்துக்களை உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.

பிரச்சனைகள் கணவன் மனைவிக்கு இடையில் உள்ள பிரச்சனைகள், தேவையில்லாத கற்பனைகள் போன்றவற்றின் மூலம் மன அழுத்தம் ஏற்பட்டு, உடலுறவில் நாட்டம் இல்லாமல் போகும். கணவன் மனைவி இருவரும் மனம்விட்டு பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் உறவில் அவசியம்

உணவு பழக்கம் தினசரி உணவில் சரியான அளவு கொழுப்பு இருந்தாலே போதுமானது. அதிகளவு கொழுப்பு கொண்ட உணவுகளை உண்பதும் கூடாது. கொழுப்பு நிறைந்த உணவுகளும், பதப்படுத்தப்பட்ட உணவுகளும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

எதை சாப்பிடலாம் புதிய காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவாக எடுத்துக்கொள்வது சிறந்தது. அதிக அளவு சர்க்கரையை எடுத்துக்கொள்வது கூடாது. சோடா மற்றும் பாஸ்ட் புட்களை தவிர்ப்பது உடல்நலத்திற்கு சிறந்தது.