மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இந்த மூன்றில் எது பேராசையாக மாறினாலும், அவனை சார்ந்தவர்களின் வாழ்க்கை நரகமாக தான் இருக்கும். ஏன்டா இவங்க கூட வாழ்கிறோம் என்ற உணர்வு வந்துவிடும். தற்கால ஆண்களும், பெண்களும் பணத்திற்காக பிடிக்காத ஒருவரை திருமணம் செய்து விட்டு, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிறருடன் உ டலுறவு கொள்ளும் பழக்கம் அதிகரித்துவிட்டது. வாழ்க்கை துணையாக இருக்க வேண்டும் என்ற நிலை எல்லாம் மாறி, வசதிக்கு துணையாக இருக்க வேண்டும் என்ற மனநிலைக்கு மாறிவிட்டனர்.
தமிழகத்தை எடுத்துக்கொண்டால், பத்தில், ஏழு பெண்கள் திருமணமாகி ஐந்து வருடம் கழித்து, கணவர் தங்கள் மீது அக்கறை காட்டவில்லை என்ற காரணத்திற்காக பிற ஆண்கள் மீது ஈர்ப்பு வருவதாக கூறுகின்றனர். கையில் இருக்கும் வரை அருமை புரியால், அவளை உறவு கொள்ளும் இயந்திரமாகவே பார்க்கும் ஆண்கள், கைவிட்டு நழுவிய பின்னர், புலம்பி தவிப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. பணமும், வேலையும் தான் முக்கியம் என்றால், திருமணம் செய்யாமலேயே இருந்திருக்கலாமே.
ஒரு சிலர் உடல் தகத்தை மட்டும் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவோடு செய்யும் திருமணம், பல கனவுகளோடு திருமண வாழ்க்கைக்குள் நுழையும் பெண்களுக்கு பேரிடியாக அமைகிறது. காட்டு விலங்குகளை போல, நினைத்தால் உறவு கொள்ளலாம், ஆசை வந்துவிட்டால் அவள் நமக்கு அடிமை என்பது போன்ற மிதப்பு சிலருக்கு வந்துவிடுகிறது. மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அவனுக்கு என்று கட்டுப்பாடு, சமூக ஒழுக்கம் என்பது இருக்கிறது. சமூக ஓட்டத்தோடு முறையாக உறவை வைத்துக் கொள்ள வேண்டும்.
சிலரை பார்த்த உடனே ஆசை மிகுதி பெறுவதும், அடைய வேண்டும் என்று மனம் எத்தனிப்பதும் இயற்கை தான். அந்த உணர்வுகளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அதனை மீறி பார்க்கும் எல்லா பெண்களையும் போகப்பொருளாக மட்டுமே நினைத்துக்கொண்டு அடைய துடிப்பது, விலங்கை விட மோசமான புத்தியை குறிக்கும். மனதிற்குள் ஆசை இருக்கலாம், அதுவே பேராசையாக மாறிவிடக்கூடாது. என்னுடைய நண்பன், தன்னுடைய தாயின் வயயொத்த பெண்களை கூட, தவறான நோக்கில் அணுக முயற்சிக்கிறான்.
அவனுடைய போக்கை பார்த்து, முக்கால்வாசி நண்பர்கள் அவனுடைய தொடர்பை முற்றிலுமாக துண்டித்துவிட்டனர். ஒரு காலத்தில் அவனை அழைக்காமல் எப்படி வீட்டு விசேஷம் நடத்துவது என்று யோசித்த நண்பர்கள் எல்லாம், இன்றைக்கு அவனை அழைத்தால், வீட்டில் உள்ள பெண்களைக்கூட தவறாக பார்த்துவிடுவானோ என்ற அச்சத்தில் தவிர்த்து விடுகின்றனர். கட்டுக்கடங்காமல் பயணிக்க பார்க்கும் ஆசைக்கு, கொஞ்சம் கடிவாளம் போட்டு வைக்க வேண்டும். இல்லையென்றால் எந்த நேரத்தில் எங்கு மோதும் என்று தெரியாது.