Home இரகசியகேள்வி-பதில் நானும், அவரும் மனதளவிலும், உடலளவிலும், நெருக்கமாகி விட்டோம்.

நானும், அவரும் மனதளவிலும், உடலளவிலும், நெருக்கமாகி விட்டோம்.

92

BHABHI3Tamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,xxxvideo,antharangam,tamil hot,antharanka thakaval,அன்புள்ள அம்மா —
நான் என் வாழ்வில் நடந்த பிரச்னைக்கு, உங்களிடம் தீர்வு கேட்கிறேன். என் 22வது வயதில் திருமணம் நடைபெற்றது. என் கணவர், அரசு பணியாளர். நான் பள்ளியில் ஆசிரியையாக தற்போது பணிபுரிகிறேன்.
என் பிரச்னை என்னவெனில், எனக்கு 29 வயதாகும் போது, என் கணவர் கேன்சர் வியாதியில் இறந்து போனார். அப்போது, என் மகனுக்கு, ஐந்து வயது. என் வீட்டில் நான்தான் முதல் பெண், அதனால், தங்கைக்கு திருமண வயது கடந்தும், திருமணமாகாததால், எனக்கு மறுமணம் செய்து வைக்க, என் பெற்றோர் முயற்சி எடுக்கவில்லை. ஆதனால் என் மாமனார் வீட்டில் இருந்து வந்தேன். மாமனார் பேரன் மேல் உள்ள அக்கறையால், அமைதியாக இருந்து விட்டார். ஐந்து வருடம் அவர்களுடன் இருந்து கஷ்டப்பட்டேன். இப்படி இருக்கும் பட்சத்தில், என் கணவரின் நெருங்கிய அலுவலக நண்பர், என் கணவருக்கு வரவேண்டிய பணம் பெற சிறு உதவிகள் செய்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. என்னை விட இரண்டு வயது இளையவர். அதனால், அவரது உதவிகளை இயல்பாக எடுத்துக் கொண்டேன். ஆனால், அவர் என்னை மறைமுகமாக விரும்பியது, எனக்கு தெரியவில்லை.
இந்நிலையில், என் கணவரின் ட்ரீட்மென்ட்டுக்கு, கடனாக கொடுத்த பணத்தை கேட்டான் கணவனின் அண்ணன். திருப்பி தர இயலாததால், சொந்த வீட்டை நைசாக பேசி, மாமனாரிடம் எழுதி வாங்கி விட்டான். இதனால், பிரச்னைகள் எழ, அந்த இடத்தை காலி செய்து, நான் வேலை பார்க்கும் பள்ளிக்கு அருகில், வாடகை வீட்டில், நானும், என் மகனும் இருக்கிறோம். இப்போது, எனக்கு உதவிய அந்த நபர், என்னை பார்க்க, எனக்கு உதவி செய்ய, அடிக்கடி வந்து, என் மனதில் இடம்பிடித்து விட்டார். நானும், அவரும் மனதளவிலும், உடலளவிலும், நெருக்கமாகி விட்டோம்.
சில நாட்கள் கழித்து, அவர் மனைவி, அவருடைய அம்மா, அப்பா, உடன் பிறந்தவர்களுக்கும் தெரிந்து விட்டது. இதற்கிடையில், என் கணவருக்கு வந்த பணத்தில், அவர், எனக்கு சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்தார். என்னுடைய வருமானத்தை நானும், அவருடைய வருமானத்தை, அவர் குடும்பத்துக்கும் செலவு செய்தோம். வெளியில் அழைத்து செல்லும் போது மட்டும், சில பொருட்கள் வாங்கி தருவார்.
அவரின் பெற்றோர், எங்கள் உறவை ஏற்றுக் கொண்டனர். ஆனால், அவரின் மனைவி, அவரிடம் சண்டை போடுவாராம். பின்பு அமைதியாக இருந்து விடுவாராம். அவரும், அவர் மனைவியும் காதல் திருமணம் செய்தவர்கள். மனைவியின் வீடு ஏழ்மையானது. இவர் அரசு பணியில் உள்ளவர். இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
என்னை பார்க்க, பகலில் வருவார். இரவு அவர் வீட்டிற்கு சென்று விடுவார். ஆறு மாதத்திற்கு ஒரு முறை, இரவில் என்னுடன் தங்குவார். என்னோடு நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று அவரிடம் @கட்@பன். அதற்கு அவர், “குழந்தைகள், சிறியவர்களாக உள்ளனர். அவர்கள் பெரியவர்கள் ஆனதும், என் கடைசி காலத்தில், உன்னுடன் தான் இருப்பேன்…’ என்று கூறுகிறார்.
என்னை அதிகம் நேசிப்பார். இதனால், என் மறுமண ஆசையும் போய்விட்டது. அவர் குடும்பத்தில் அவர் தான் பணியில் உள்ளார். அம்மா, என் வாழ்க்கையில் இந்த அளவு முன்னேற்றம் அடைந்தது, அவரால் தான். தன் மனைவி என்ன சொன்னாலும், அதை பொருட்படுத்தாது, என்னை நேசித்து, என் தேவைகளை பூர்த்தி செய்வார்.
இது என் குடும்பத்துக்கும், என் மாமனார் குடும்பத்துக்கும் நன்கு தெரியும். அவர்கள் ஏதும் கூறவில்லை. இப்போது எனக்கு, 40 வயது ஆகிவிட்டது. அம்மா, இப்@பாது, பிரச்னை என்னவெனில், என் முதிர் வயதில் அவர் என்னுடன் நல்ல துணையாக இருப்பாரா? இவர் சொல்வது ஏமாற்று வேலையா? அவரது சொல்லை நம்பலாமா? மகன் பெரியவன் ஆனதும், எங்கள் உறவை கண்டு, என்னை வெறுத்து விடுவா@னா? என் மகனின் ஆதரவும் இல்லாமல், இவரின் அன்பும் இல்லாமல், தனிமைபடுத்தப்படுவே@னா? அவரது பேச்சை நம்பலாமா? இவரின் அன்பும், அரவணைப்பும் கடைசிவரை இருக்குமா அல்லது மனமாற்றம் அடைந்து விடுவாரா?
எனக்கு பதில் கூறுங்கள் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —
உன் கடிதம் கிடைத்தது. முழுவதும் படித்தேன். உன் கணவனின் மரணத்திற்கு பின், உன் வாழ்வில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் பூத்துள்ளது. உனக்கு, சில பல உதவிகள் செய்து, அந்த வெற்றிடத்தை நிரப்பினான் கணவனின் அலுவலக நண்பன். அவனுக்கு, நீ ஆசை நாயகியாகி, 11 வருடங்கள் ஆகின்றன. இப்போது, உன் மகனுக்கு வயது 16. ப்ளஸ் 1 படிக்கிறான் என நினைக்கிறேன். உன் ஆசைநாயகனின் இரு குழந்தைகளுக்கும் வயது, 12, 10 ஆகும் என நம்புகிறேன்.
மருமகள் மேலுள்ள அதிருப்தியாலும், கோபத்தாலுமே, மகனின் தகாத உறவை ஏற்றுக் கொண்டனர் உன் ஆசைநாயகனின் பெற்றோர். பொருளாதார பாதுகாப்பு இல்லாததால் தான், ஆசை நாயகனின் மனைவியும், கணவனுக்கு அடங்கிப் போகிறாள்.
உன் ஆசைநாயகன் பணவிஷயத்தில் நேர்மையானவன். உன் கணவனின் பணத்தை சுருட்டி ஏப்பமிடாமல், உனக்கு வீடு கட்டித் தந்திருக்கிறான். கட்டிய காதல் மனைவிக்கும், ஆசை நாயகிக்கும் இடையே இருதலை கொள்ளி எறும்பாய் தவிக்கிறான் அவன். பார்ட் டைம் பணி பார்ப்பது போல், உன் வீட்டுக்கு பகல் நேரங்களில் வந்து போகிறான். இரவு நேரத்தில், மனைவி குழந்தைகளுடன் கூடு சேர்கிறான்.
உன் கடிதத்தின் கடைசியில், சில கேள்விகளை கேட்டிருக்கிறாய். அதற்கான பதில்களை பார்ப்போம்.
உன் முதிர் வயதில் அவன் உன்னுடன் சேர்ந்து இருப்பானா என கேட்டிருக்கிறாய். தன் கடைசி காலத்தில், உன்னுடன் சேர்ந்து வாழ போவதாக உன் ஆசை நாயகன் கூறுகிறான். அவனது இரு குழந்தைகளையும், படிக்க வைத்து திருமணம் செய்து கொடுக்க, எப்படியும், 13லிருந்து, 15 வருடங்கள் ஆகும். 15 வருடங்கள் என்பது, மிகப்பெரிய இடைவெளி. இந்த இடைவெளியில், என்னென்ன மாற்றங்கள் உங்களிருவர் வாழ்க்கையிலும் நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதை இறைவன் ஒருவனே அறிவான்.
அதற்குள் உன் ஆசை நாயகனுக்கு உன்னுடனான உறவு கசந்து போகலாம். உன் ஆசைநாயகனின் குழந்தைகள் செட்டிலாவதற்கு முன், உன் மகன் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவான். மகன், மருமகள், பேரன் அல்லது பேத்தியுடன் உன் வாழ்க்கை இணைந்து விடும். அப்போது உனக்கு உன் ஆசைநாயகன் தேவையற்றவனாகி விடுவான். உங்களிருவரின் உறவு, திருமண பந்தம் மீறிய உறவாகவே தொடரும் பட்சத்தில், உங்களிருவரில், யாராவது இவ்வுறவில் அதிருப்தியுற்று உறவை கத்தரித்துவிட, லட்சம் சதவீதம் வாய்ப்பிருக்கிறது.
உன் தகாத உறவினால், பின்னாளில் உன் மகன் உன்னை வெறுத்துவிட வாய்ப்பிருக்கிறதா என கேட்டிருக்கிறாய். உன் மகனின் ஆதரவும் இல்லாமல், உன் ஆசைநாயகனின் அன்பும் இல்லாமல், நீ தனிமையில் வாட, நிறைய சாத்தியமிருக்கிறது. மகனிடம் தனித்து பேசிப்பேசி, உன் தரப்பு நியாயங்களை அவனுக்கு உணர்த்து. தாய் – மகன் பந்தம் அறுந்து விடாமல்
பாதுகாத்துக் கொள். உன் கடைசி காலத்தில், நீ தஞ்சமடையப் போவது, மகனின் நிழலில் தான். அடுத்து என்ன செய்யலாமென கேட்கிறாயா மகளே?
மனைவியின் சம்மதத்துடன் உன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள அவனை வற்புறுத்து. மனைவி அந்தஸ்து கிடைப்பது உன் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக்கும். அவன், உன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பான். அதை ஒரு வாய்ப்பாக கருதி, அவனது தொடர்பை நிரந்தரமாக கத்தரித்துக் கொள். 11 வருடங்கள் உன் உடல் சொல்வதை கேட்டு, அதை திருப்தி செய்தாய். போதும், இனி உன் தாய் மனம் சொல்வதை கேட்டு, அதை மகிமைப்படுத்து. இனி, உன் மகனின் எதிர்காலமே, உன் எதிர்காலம்!