Home சமையல் குறிப்புகள் நண்டுக்கால் ரசம் ரெசிபி | Crab Soup !

நண்டுக்கால் ரசம் ரெசிபி | Crab Soup !

23

நண்டுக்கால் ரசம். நண்டுக்கால் ரசம், சுவையானது மட்டு மல்லாமல், சளித் தொல்லை, ஜலதோஷம் போக்கும் மருந்தாகப் பயன் படுகிறது என்பது தான் விசேஷம். நண்டு ரசத்தை எப்படித் தயார் செய்யலாம்

தேவையான பொருள்கள்:

கடல் நண்டின் கால்கள் மட்டும் – 15

சீரகம் – 20 கிராம்

சோம்பு – 20 கிராம்

மிளகு – 30 எண்ணிக்கை யில்

முழுப் பூண்டு – 1

சாம்பார் வெங்காயம் – 50 கிராம்

காய்ந்த மிளகாய் – 2

தக்காளி – 2

புளி – நெல்லிக்காய் அளவு

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

தேங்காய்ப் பால் 50 மில்லி

தாளிக்கத் தேவையான அளவு – கடலை எண்ணெய், கடுகு உளுந்து, உப்பு, கறிவேப்பிலை.

செய்முறை:

நண்டுக் கால்கள் ஒவ்வொன்றிலும் கடிக்கும் பகுதியைக் கணு வரை வெட்டி விட்டு, அதை இரண்டாக வெட்டி, தண்ணீரில் சுத்தமாக அலசி எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளவும்.

சீரகம், சோம்பு இரண்டையும் நீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். மிளகு, பூண்டு இரண் டையும் நைத்து வைத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை அரிந்தும் காய்ந்த மிளகாய் களைக் காம்பு கிள்ளியும் வைத்துக் கொள்ளவும். தேங்காய்ப் பால் எடுத்து வைக்கவும்.

அரைத்து வைத்திருக்கும் சோம்பு, சீரகத்தைத் தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கரைத்து, அதில் புளியையும் கரைத்துக் கொள்ளவும். ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை அதில் போடவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் தேவையான அளவு ஊற்றிக் காய்ந்ததும், கடுகு உளுந்து, கறிவேப் பிலை, காய்ந்த மிளகாயைப் போட்டு வதக்கவும்.

அடுத்து, வெங்காயத் தையும் தக்காளி யையும் போட்டு நன்றாக வதக்கவும். வதங்கிச் சுருண்டதும், கரைத்து வைத்திருக்கும் கலவையை வாணலியில் ஊற்றவும். தேவையான உப்பு போடவும்.

ரசக் கரைசல் நன்றாகச் சூடானதும் நண்டுக் கால்களை அதில் எடுத்துப் போடவும். கால்கள் வெந்ததும் சிவந்த நிறமாகும். ரசம், நண்டுக் கால்களில் படியும் நிலையில், தேங்காய்ப் பால் ஊற்றிக் கிண்டி, இறக்கவும்.

மிதமான சூட்டில் ரசத்தைக் குடிக்கலாம்; சாதாரண ரசம் போலவே, நண்டுக் கால் ரசத்தையும் சாதத்தில் ஊற்றிச் சாப்பிடலாம். பனிக்கால ஜலதோஷம், சளித் தொல்லை தீரும். மணமும் சுவையும் மறக்க முடியாது.