Home சூடான செய்திகள் தேன்னிலவில் பிரச்சினை எதற்கு?

தேன்னிலவில் பிரச்சினை எதற்கு?

17

புதுமணத் தம்பதிகள் தங்களின் வாழ்க்கையை காதலோடு துவங்கும் தருணம்,தேனிலவு. இந்தநாட்களில் தம்பதிகளிடையே சச்சரவு எழுவது குறைவு.
ஆனால் வாய்ச் சண்டை போட்டாலும், இதெல்லாம் சாதாரண விஷயம் என்று கருத வேண்டாம்.
திருமண வாழ்க்கையை அமைதியாக, இனிமையாகத் தொடங்கும் தம்பதிகளுடன் ஒப்பிடும் போது, சண்டை சச்சரவுடன் தொடங்கும் தம்பதிகளின் வாழ்க்கை பின்னாளிலும் இரைச்சலுடனே தொடர்கிறது என்கிறார்கள்.
ஒஹியோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஆய்வை 20 ஆண்டு காலம் மேற்கொண்டார்கள்.
ஆயிரம் தம்பதிகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். ஆரம்பத்திலேயே சண்டை போடுபவர்களின் வாழ்வில் 20 ஆண்டு காலத்தில் எந்த மாற்றமும் தென்படவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சண்டையிடும் தம்பதிகளின் குணம் அவர்களுக்கு வயதாக வயதாகவும் அப்படியே இருக்கிறதாம்.
அவர்களில் 16 சதவீதம் பேர் நீண்ட இடைவெளிகளில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். சண்டையிடும் தம்பதிகளின் பிரச்சினைகளில் 10-ல் 6 பிரச்சினைகள் அபூர்வமானவையாக உள்ளன. 22 சதவீதம் தம்பதிகள் மட்டும், தாங்கள் தேனிலவின் போது சண்டையிட்டோம்.
ஆனால் மறுபடி அப்படித் தாங்கள் சண்டை போட்டுக்கொள்ளவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். `முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்று சும்மாவா சொன்னார்கள்?