Home சமையல் குறிப்புகள் தேங்காய்ப் பால் சிக்க‍ன் கிரேவி

தேங்காய்ப் பால் சிக்க‍ன் கிரேவி

31

புதுவித உணவு வகைகளைச் சமைத்து ருசிப்ப‍தில் தனி ஆனந்தமும் ஆர்வமும் இயல்பாக வருவதுண்டு. சரி இப்போது புதுமையான அதே
நேரத்தில் மிகவும் சுவையான தேங்காய்பால் சிக்கன் கிரேவி எப்ப‍டி செய்வது என்பதைப் பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
வெங்காயம் நறுக்கியது – 1 கப்
தக்காளி நறுக்கியது – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
பட்டை கிராம்பு -சிறிதளவு
பிரிஞ்சி இலை – 2
தேங்காய் பால் – அரை கப்
சிக்கன் மசாலா – 3 ஸ்பூன்
தனியா தூள் – 2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, பிரிஞ்சி இலை, தாளித்து அதனுடன் இ ஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், தக்காளி பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
சிறிதளவு வதங்கியவுடன் அதோ டு சிக்கன் தூள், தனியா தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சேர்த்து வதக்கவும்.
இவை அனைத்தும் நன்றாக வங்கியவுடன் சிக்கன் துண்டுக ளை தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சேர்த்து வேக விடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வரும் வரை வேக விட்டு இறக்கவும். சுவையான சிக்கன் கிரேவி ரெடி.