Home ஆரோக்கியம் தூங்கும் போது ஆளை அமுக்கும் ‘அமுக்குவான் பேய்’ பற்றி தெரியுமா?

தூங்கும் போது ஆளை அமுக்கும் ‘அமுக்குவான் பேய்’ பற்றி தெரியுமா?

55

30-1435661273-sleep-paralysisதூங்கிக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒன்று அமுக்குவது போன்று உள்ளதா? அந்நேரத்தில் உங்களால் கண்ணைத் திறக்கவோ அல்லது கத்தவோ அல்லது எழவோ, ஏன் கை, கால்களைக் கூட அசைக்க கூட முடியாத அளவில் இருந்தீர்களா? அப்படியெனில் நீங்கள் தூங்கும் அறைக்குள் அமுக்குவான் பேய் உள்ளது என்று அர்த்தம். இந்த பேய் இரவில் மட்டுமின்றி, பகலில் கூட வரும்.

இந்த பேய் முருங்கை மரத்தில் அல்லது புளிய மரத்தில் தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இது கண்ணாடி, பீரோ, கட்டிலுக்கு அடியில் கூட இருக்கும். இந்த பேயால் உயிர் போகாவிட்டாலும், இது மிகவும் கொடூரமான பேய் என்றெல்லாம் பேய் கதை சொல்லலாம். ஆனால் உண்மையில் அமுக்குவான் பேய் என்பது ஒரு வகையான தூக்க பக்கவாதம். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தூக்க பக்கவாதம் அமுக்குவான் பேய் என்று அழைக்கப்படும் தூக்க பக்கவாதம் ஒரு நிகழ்வாகும். இந்த நிகழ்வின் போது விழித்திருக்கும் நிலையில் எச்செயலையும், அதாவது பேசவோ, எழுந்திரிக்கவோ, கை, கால்களை அசைக்கவோ முடியாத நிலையில் இருப்பதாகும். இது விழித்திருக்கும் நிலை மற்றும் தூக்கத்திற்கு இடைப்பட்ட, முழுத்தசை பலவீனத்தால் ஏற்படுவதாகும்.
தூக்க பக்கவாதம் ஏன் ஏற்படுகிறது? பத்தில் 4 பேர் நிச்சயம் இந்த தூக்க பக்கவாதத்தை அனுபவித்திருப்பார்கள். இது எந்த வயதினருக்கும் ஏற்படலாம். முக்கியமாக இந்த நிலை ஏற்படுவதற்கு, அதிகப்படியான பயத்துடன் தூங்குவது, தூக்கமின்மை, தூங்கும் நேரத்தில் மாற்றம், அதிகப்படியான மன அழுத்தம், முதுகில் படுப்பது, ஒருசில மருந்துகள் போன்றவை இந்த தூக்க பக்கவாத்திற்கு காரணிகளாகும்.

தூக்க பக்கவாத வகைகள் தூக்க பக்கவாதத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அவை தனிமைத் தூக்க பக்கவாதம் மற்றும் தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் ஆகும்.

தனிமைத் தூக்க பக்கவாதம் தனிமை தூக்க பக்கவாதம் என்பது ஒருவருக்கு எப்போதாவது 2 நிமிடத்திற்கும் குறைந்த நேரத்தில் நிகழும். இதனால் எவ்வித பிரச்சனையும் இல்லை.
தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் தொடர் தனிமைத் தூக்க பக்கவாதமானது அடிக்கடி வரும். அதிலும் சிலருக்கு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இது நிகழும். இத்தகையவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று வருவது நல்லது.

தூக்க பக்கவாதத்தினால் ஏதேனும் ஆபத்து உள்ளதா? தூக்க பக்கவாதம் என்பது தூங்கும் போது உடலானது மென்மையான இயக்கத்தில் இல்லை என்பதற்கான சாதாரண அறிகுறியே என்றும், அரிதாக தூக்க பக்கவாதத்திற்கும், உளவியல் பிரச்சனைக்கும் தொடர்ப்புள்ளதாகவும் தூக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.