தூக்கம் வராமல் தூக்கமாத்திரை போட்டுக்கொண்டு தூங்குபவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
தூக்கமின்மை என்பது ஒரு நோய். இந்த பிரச்சினைக்கு தீர்வு தருவதற்காகவே வெளிநாடுகளில் ஸ்பெசலிஸ்டுகள் இருக்கின்றனர். ஆனால் நம்நாட்டில் இதனை யாரும் சரியாக புரிந்து கொள்வதில்லை. தலைவலி, காய்ச்சல் போல ஒரு மாத்திரையை வாங்கிப்போட்டு முடித்திக் கொள்கின்றனர்.
தூக்கமாத்திரைகளை போடுவதனால் வாய் உலர்தல், தலை சுற்றல், வயிற்றுப்போக்கு போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இரண்டு நாட்களில் மாத்திரையை நிறுத்துவிடாமல் மாதக்கணக்கில் தூக்கமாத்திரை எடுத்துக்கொள்வோருக்கு நாளடைவில் ரத்த அழுத்தம் குறைந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு இதய பாதிப்பு வரை ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
மருத்துவர்களின் அறிவுரை இன்றி மாதக்கணக்கில் தூக்கமாத்திரை எடுத்துக்கொண்டவர்களை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில்தான் அதிக அளவில் தூக்கமாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கு கேன்சர் வரும் என்று எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கின்றனர்.
முன்பெல்லாம் வயதானவர்கள்தான் தூக்கம் வராமல் தவித்தனர். ஆனால் இன்றைக்கு இருக்கும் பணிப் பளுவினால் இளம் வயதினாரும் தூக்கம் வராமல் தவிக்கின்றனர். அவர்கள் மருத்துவரிடம் சென்று தூக்கமாத்திரை கேட்டு வாங்கி சாப்பிடத் தொடங்கியுள்ளனர் அவர்களை எச்சரிக்கும் விதமாக அமைந்துள்ளது இந்த முதற்கட்ட ஆய்வு முடிவு.
உடம்புக்கு தேவையான தூக்கம் கிடைக்காத போது மன அழுத்தத்துடன் கல்லீரல், சிறுநீரகம் கூட பாதிக்கப்படலாம் என்று கூறும் மருத்துவர்கள்
‘‘மாத்திரைகளைத் தாண்டி, சில சிகிச்சைகள், உடற்பயிற்சிகள் மூலமாவும் தூக்கமின்மை பிரச்னையில இருந்து விடுபட முடியும் என்று ஆறுதல் அளித்துள்ளனர்.