Home ஆரோக்கியம் தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா?… இதோ உங்களுக்கான உடனடி தீர்வு

தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா?… இதோ உங்களுக்கான உடனடி தீர்வு

29

இரவில் சரியான தூக்கம் இல்லையா, இரவில் புரண்டு புரண்டு படுக்கிறீர்களா? நேற்றைய நிகழ்வுகள் நினைவில் இல்லையா? இதெல்லாம் நீங்கள் தூக்கமின்மை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளதற்கான அறிகுறிகள்….

தூக்கமின்மை குறைபாடு, ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்களின் மரணத்திற்கு காரணமாகிறது.

தூக்கமின்மையால், மனஅழுத்தம், உடல் அசதி, பணியில் ஈடுபாடு இன்மை, உடலுறவில் அதிருப்தி உள்ளிட்டவைகள் ஏற்பட காரணமாக அமைகிறது.

தூக்கமின்மை குறைபாட்டை நாம் எளிதில் தீர்க்கலாம். அதற்கான வழிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன….

தூக்கம் மற்றும் உடலுறவுக்கு மட்டுமே படுக்கை
தூங்கி எழுந்தபிறகும் நீண்டநேரம் படுக்கையில் கிடப்பதும் தூக்கமின்மை குறைபாடு ஏற்பட முக்கிய காரணம் ஆகும். படுக்கையிலேயே தொடர்ந்து நீண்டநேரம் செலவிட்டால், மூளையும் விரைவில் சோர்ந்து உடல் அசதிக்கு வழிவகுத்துவிடும்.

எனவே தூங்கும்போதும் மற்றும் உடலுறவு காலத்தில் மட்டுமே படுக்கையை பயன்படுத்த நாம் பழகிக்கொள்ள வேண்டும். தூக்கம் வராவிட்டால், உடனே படுக்கையை விட்டு எழுந்துவிட வேண்டும், அதேபோல் உடலுறவிற்கு துணை ஒத்துழைக்காதபட்சத்தில் மாற்று ஏற்பாடு (செக்ஸ் பொம்மை) செய்துகொள்ள வேண்டும். இல்லையேல், படுக்கையை விட்டு சென்றுவிட வேண்டும். மனைவி அல்லது காதலி உடலுறவிற்கு ஒத்துழைக்காதபட்சத்தில் நீண்ட தொள தொள ஆடை அணியும் பட்சத்தில், அது உங்கள் துணையை கிளர்ச்சியுற செய்யும்…
குறைந்த வெளிச்சமே போதும்…

குறைந்தளவிலான வெளிச்சமே, தூக்கத்திற்கு இனிய சூழ்நிலையாக அமைய முடியும். தூங்க செல்வதற்கு ஒருமணிநேரத்திற்கு முன்னரே, டிவி, கம்ப்யூட்டர். ஸ்மார்ட்போன் உள்ளிட்டவைகளின் பயன்பாட்டை முடித்துக்கொள்ள வேண்டும்.

படுக்கையறையில் ஜன்னல்கள் இருக்கும்பட்சத்தில் திரைச்சீலைகள் கட்டயமாக இருக்க வேண்டும். படுக்கையில் இருந்து எழுந்தே, ஜன்னல் வழியே பார்க்கும்படியாக இருக்கவேண்டும்.

மதுப்பழக்கத்தில் அடிமையானவர்களுக்கு சரியான தூக்கம் எப்போதும் இருக்காது. எனவே முதலில் அப்பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும். இதற்கான மறுவாழ்வு மையங்கள் தற்போதைய அளவில் அதிகம் உள்ளன. அதில் சிறந்த மற்றும் தரமான மையங்களில் சேர்ந்து சிகிச்சை பெற்று மதுப்பழக்கத்திலிருந்து மீளலாம்.

குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர்களுடன் மனந்திறந்து பேசுவதனால், மனதில் உள்ள பாரம் குறைவதோடு மட்டுமல்லாது, சிறந்த தூக்கத்திற்கும் இது சிறந்த தீர்வாக அமையும்.

நமது மனம் அமைதியாக இருந்தாலே, நாம் நல்ல தூக்கம் தூங்கலாம். இரவின் பயணமே தூக்கம் என்பதை எக்காரணத்திலும் நாம் மறக்க கூடாது. தூங்க செல்வதற்கு முன்னர், நமக்கு பிடித்த புத்தகங்களை படிக்கலாம். புத்தகங்கள் உள்ளிட்ட நம் மனதிற்கு பிடித்த விசயங்களை தூங்க செல்வதற்கு முன்னால் செய்தால் மன அமைதி பெறலாம்.

தூக்கத்தில் ஏற்படும் கனவின் போது நமது மூளை துரிதமாக செயல்பட்டு மெலடோனின் என்ற ஹார்மோனை சுரப்பதால், தூக்கம் ஏற்படுத்தும் ஹார்மோன்களின் செயல் தடைபட்டு உடல் மிகவும் அசதி அடைகிறது. எனவே தூங்கும்போது எவ்வித சிந்தனையுமில்லாமல் தூங்க சென்றால், ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.

தூங்க செல்வதற்கு முன் காபி உள்ளிட்ட பானங்களை அருந்துவதன் மூலம் தூக்கம் பெருமளவில் தடைபடுகிறது. தூக்கம் இருந்தாலும், அதில் ஏற்படும் கனவுகளால், தூக்கம் தடைபடலாம், எனவே கனவுகளில் வாழ்வதை தவிர்த்து, தினமும் 6 முதல் 8 மணிநேரம் தொடர்ந்து தூங்க உறுதி மேற்கொள்ளுங்கள்.
சிறந்த தூக்கம் தூங்குங்கள்…நலமான வாழ்க்கை வாழுங்கள்!!!!