Home ஆண்கள் தூக்கத்தில் விந்து வெளியேறுகிறதா? தடுக்க சில வழிகள்

தூக்கத்தில் விந்து வெளியேறுகிறதா? தடுக்க சில வழிகள்

80

wet-dreams-20-1461147150ஆண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் இரவில் தூக்கத்தின் போது தானாக விந்து வெளியேறுவது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பலரும் தவறாக நினைப்பது, எப்போதும் செக்ஸ் எண்ணத்துடன் இருப்பது என்று. ஆனால் உண்மையில், இது அதிகப்படியான உடல் சூடு, தூக்கமின்மை, உடுத்தும் உடை, தூங்கும் நிலை, உண்ணும் உணவுகள், சுய இன்பம் காணாமல் இருப்பது போன்றவற்றினால் தான் நிகழ்கிறது.

மேலும் ஆய்வுகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்கள் தன் வாழ்நாளில் குறைந்தது ஒருமுறையாவது இப்பிரச்சனையை சந்தித்திருக்கக்கூடும் என்று சொல்கிறது. இப்பிரச்சனை அதிகமானால், அதனை சரிசெய்ய சில இயற்கை வைத்தியங்கள் உள்ளன. அவற்றைப் பின்பற்றி வந்தால், தூக்கத்தின் போது படுக்கையில் விந்து வெளிவருவதைத் தடுக்கலாம்.

சரி, இப்போது தூக்கத்தின் போது படுக்கையில் தானாக விந்து வெளிவருவதை தடுக்க உதவும் சில வழிகளைக் காண்போம்.

தூங்கும் நிலை
சில ஆண்களுக்கு தூங்கும் நிலையின் காரணமாகவும் விந்து வெளியேற்றப்படும். அதுவும் குப்புறப் படுக்கும் போது, ஆண்குறி படுக்கையுடன் உராய்ந்து, அதனால் விந்து வெளியேற்றப்படுகிறது. எனவே ஆண்கள் இந்த நிலையைத் தவிர்க்க பக்கவாட்டில் (வலது அல்லது இடது புறத்தில்) அல்லது மல்லாக்க படுக்க வேண்டும்.