Home உறவு-காதல் திருமண வாழ்வில் நடக்கும் குசும்புதனமான செயல்பாடுகள்..!

திருமண வாழ்வில் நடக்கும் குசும்புதனமான செயல்பாடுகள்..!

18

downloadதிருமண வாழ்க்கை என்றாலே சந்தோசத்தை சீர்குலைக்க செய்யும் தோஷம், அது நிம்மதியை குறைத்துவிடும் என்று பலவாறு கூறுவார்கள். ஆனால், யாரும் அதற்காக திருமணம் செய்துக்கொள்ளாமல் இருப்பது இல்லை. ஏனெனில், உண்மையாக வாழ்பவர்களுக்கு அது பலமடங்கு மகிழ்ச்சியை குறையாமல் அள்ளித்தரும் அட்சயபாத்திரமாக திகழ்கிறது.

இன்ற சில இளைஞர்கள் லிவ்விங்-டுகெதர் என்ற வாழ்வியல் முறையை பின்பற்றி, திருமணத்தில் இருக்கும் மகிழ்ச்சியை இழந்துவிடுகிறார்கள். இது தான் திருமணத்திற்கு பிறகு மனக்கசப்பு ஏற்பட்டு அவர்கள் பிரிந்து போக காரணமாகிவிடுகிறது.

திருமணமான முதல் ஓரிரு வருடங்களில் தம்பதியர் மத்தியில் குசும்புத்தனம் அருவியில் இருந்து கீழ் விழும் நீர் போல இருக்கும். புதிய வாழ்க்கை, புதிய உறவு, மனதில் புது மாதிரியான உணர்வுகைளை அதிகரிக்க செய்யும். இதன் விளைவாக இவர்கள் ஈடுபடும் சில குசும்புத்தனமான விஷயங்களின் மூலம் கிடைக்கும் இன்பம் வாழ்ந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாகும்…..

ஒருவரது உடையை மற்றொருவர் அணிவது
இந்த விளையாட்டு வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் தாம் பெரும்பாலும் நடக்கும். இது சில விஷயங்களை துவக்க அச்சாரமாக கூட இருக்கும் என்பது கொசுறு செய்தி. பெரும்பாலும் பெண்கள் தான் ஆண்களின் உடையை அணிந்து வீடு முழுக்கு உலா வருவார்கள். ஏனெனில், ஆண்கள் அணிந்தால் கொஞ்சம் “டொன்கல்” போல இருக்கும்.

பல் துலக்கிக் கொண்டே பேசுவது
பெரும்பாலும் இந்த வகை உரையாடல்கள் தம்பதிகள் தான் மேற்கொள்வர். மற்றும் பல் துலக்கிக் கொண்டே பேசுவது அவர்களுக்கு மட்டும் தான் புரியும். மற்றும் இந்த நேரத்தில் தான் வேண்டுமென்ற பல கேள்விகளை கேட்டு நச்சரிப்பு செய்வார்கள்.

வாக்கியத்தை முழுமை செய்வது
இது மட்டும் இன்னும் மாயமாகவே இருக்கிறது. நீங்கள் கூட உங்கள் வீட்டில் இதை கண்டிருக்கலாம். கணவன் பேசிக்கொண்டிருக்கும் போது, அவரது வாக்கியத்தை மனைவி சரியாக பேசி முடிப்பார்கள். இருவர் பேசும் போதும் இது நடக்கும்.

துணி துவைக்கவில்லை என கண்டறிதல்
ஆண்கள் கொஞ்சம் சோம்பேறி, துணி துவைக்கவும் மாட்டார்கள், துவைக்கவும் போடமாட்டர்கள். திருமணத்திற்கு முன் அம்மா, பின் மனைவி தான் இந்த வேலையை செய்ய வேண்டும். சில சமயங்களில் சுவற்றில் மாட்டிவைத்த சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பும் போது, அந்த சட்டை துவைக்கவில்லை என மோந்து பார்த்து கண்டறிந்து, சட்டையை சண்டையிட்டு கழட்டி துவைக்க போடுவார்கள்.

பயமுறுத்ததல்
சிறு வயதில் விட்டொழித்த பழக்கம், மனதில் காதல் முளைத்த பிறகு மீண்டும் பிறக்கும். மனைவி அல்லது கணவன் வரும் வேளையில், கத்துவது, அலறுவது, இடையே குதிப்பது என பயமுறுத்துவார்கள்.

கிச்சு, கிச்சு மூட்டுவது
இது ஆதிகாலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் விளையாட்டு, பெரும்பாலும் கணவன் மனைவி வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தான் இந்த விளையாட்டில் ஈடுபடுவார்கள். (பின்ன வெட்கம், கூச்சம் எல்லாம் இருக்காதா பின்ன….)

ஒருவரை ஒருவர் அலங்காரம் செய்வது
வீட்டில் யாரும் இல்லாத போது, தம்பத்தில் ஈடுபடும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. ஆனால், அன்றைய தினம் விடுமுறை தினமாக இருக்க வேண்டும். ஏனெனில், இந்த விளையாட்டு மணிக்கணக்காக தொடரும். பெரும்பாலும், மனைவிமார்கள் தான் தங்களது கணவனை, குழந்தைக்கு அலங்காரம் செய்வது போல, லிப்ஸ்டிக், கண்மை, முகம் நிறைய பவுடர் என “ப்ப்ப்பபபா…” சொல்லும் அளவிற்கு மேக்-அப் செய்துவிடுவார்கள்.

இரகசிய மொழி
ஒவ்வொரு தம்பதியும் தங்களுக்கென ஓர் ரகசிய மொழி அல்லது குறியீட்டு மொழிகளை வைத்திருப்பார்கள். இது மற்றவர் முன் பேச இவர்கள் பயன்படுத்துவது ஆகும்.

ஒன்றாக குளிப்பது
பிறகு இவர்கள் இருவரும் ஒன்றாக குளிக்காமல், வேறு யார் குளிக்க முடியும். ஆயினும் கூட இதில் சில கொஞ்சல்கள் ஊடல்கள் எல்லாம் இருக்க தான் செய்யும். (இதுக்கு தானய்யா, கல்யாணம் பண்ணிக்கிங்க’னு சொல்றது…)

வேலை செய்யும் போது தொல்லை செய்வது
முக்கியமாக வேலை செய்யும் போது டான் அருகில் சென்று தொல்லை செய்வார்கள். அதிலும் கணவன்மார்கள். மனைவி சமைக்கும் போதும், துணி சலவை செய்யும் போதும், பாத்திரம் கழுவும் போது தான் பின்னே நின்று குடைவார்கள்!! அன்பும், காதலும் கொப்பளிக்கும்.