Home உறவு-காதல் திருமணம் ஆன பிறகு புரிதல் அவசியம்

திருமணம் ஆன பிறகு புரிதல் அவசியம்

30

உறவில் இருக்க வேண்டியது என்னவென்று திருமணமானவர்களிடம் கேட்டால், அவர்கள் சொல்வது இருவரும் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான். அப்படி வாழ்க்கைத் துணையிடம் தவறாமல் பகிர்ந்து கொள்ள வேண்டிய சில பொதுவான விஷயங்களை பற்றி பார்க்கலாம்…

சிலருக்கு அதிக வேலைப்பளுவின் காரணமாக, மனதில் கஷ்டம் அல்லது ஒருவித அழுத்தம் ஏற்படும். அப்படி மன கஷ்டம் இருக்கும் போது, அதனைப் பற்றி வாழ்க்கைத் துணையிடம் பகிர்ந்து கொண்டால், இருவருக்குள் இருக்கும் அன்பு அதிகரிக்கும்.

கணவன், மனைவி இருவரும் பிடித்தது மற்றும் பிடிக்காததைப் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டால், இருவருக்கும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். மேலும் இந்த மாதிரியான பேச்சு, காதலை இன்னும் வலுவானதாக மாற்றும்.

யாராலும் மற்றவர்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. ஆகவே நீங்கள் எதிர்பார்ப்பதை, துணையிடம் வெளிப்படையாக சொன்னால், அதை அவர்கள் புரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் இனிமேல் நடந்து கொள்வார்கள். குறிப்பாக, எதிர்பார்ப்புக்களிலும் ஒரு எல்லை உள்ளது. அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பது வாழ்க்கையை சீரழிக்கும். *வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரை சந்திக்கலாம். அதில் சிலர் நன்கு பழகுவார்கள். ஆகவே அப்படி புதிய நண்பர்கள் கிடைத்தால், அதைப்பற்றி இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அது எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி, அதுவே பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

காதலில் எப்போதும் இருவரைப் பற்றி பேசாமல், துணையின் குடும்பத்தைப் பற்றி நலம் விசாரிப்பது, அந்த காதலை இன்னும் வலுவாக்கும். மேலும் இவ்வாறு குடும்பத்தைப் பற்றி பேசும் போது, எதிர்காலத்தில் அவர்களை சந்திக்கும் போது, அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பது நன்கு தெரியும்.